செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் இணைந்து ஒரே வீட்டில் இருந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். நிம்மதியில்லாத வாழ்க்கை இருக்கும் என்றாலும், இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் இணைந்தாலும் தீமையையே செய்யும். ஏனென்றால், சட்டென்று முடிவெடுக்கும் தன்மையைக் கொடுப்பது செவ்வாய் கிரகம் என்றால், எதையும் நிறுத்தி நிதானமாக பேசவும் செய்யவும் வைப்பவர் சனீஸ்வரர்.
இந்த இருவேறு குணம் கொண்ட இரு கிரகங்களும் இணையும்போது, ஒருவர் நிதானமான போக்கும் இல்லாமல், சட்டென்று செயல்படும் இயல்பும் இல்லாமல், இரண்டின் கலவையாக இருப்பார், இது எந்த வேலையிலும் பிரச்சனைஅக்ளை ஏற்படுத்தும். சுறுசுறுப்பானவருடன் சோம்பேறி சேர்ந்தால் எத்தனை நாள் ஓத்துப் போகும்? ஆனால் இந்த இரண்டு கிரகங்களுமே ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால்த வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் தருவதற்கு ஏற்றவாறு செயல்பட்டு நல்ல பலன்களைத் தருவார். ஆனால், இது மிகவும் அரிதாக நிகழும் என்பதால், பொதுவாக செவ்வாய் மற்றும் சனி இணைவது என்பது பாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சனி இணைவது என்பது, இரு கிரகங்களும் 60 டிகிரி கோணத்தில் மட்டுமே நிகழும் தற்போது ஜூலை 6 ஆம் தேதி செவ்வாய் கிரகம் 60 டிகிரியில் சென்றபோது, சனியும் அதே அம்சத்தில் இருந்தார், எனவே செவ்வாய் சனியின் இணைவு ஏற்பட்ட்டுள்ளது.
செவ்வாய் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், சனி கும்பத்தில் வக்ர கதியில் இருக்கும்போது உருவாகியுள்ள இந்த இணைவு என்பது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றிருக்கிறது. நூறாண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் சனி-செவ்வாய் இணைப்பானது யாருக்கு மோசமானதாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
கடகம்
செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கையால் பாதிக்கப்படும் ராசி கடகம். தற்போது உருவாகும் புதிய உறவுகள் சில நாட்களில் சலித்து போகும், இதனால் உணர்வுரீதியான பிரச்சனைகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இருந்த நம்பிக்கை குறையும், சேமித்து வைத்திருந்த பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம்.
கன்னி
செவ்வாய்-சனி என்ற இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டிய சூழல் உருவாகலாம். திட்டமிட்ட பணிகளில் வெற்றியைப் பெறுவது கஷ்டமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும் என்ற நிலையில் இருந்தால், அதில் சனி தடையை ஏற்படுத்துவார். தொழில் செய்பவர்கள் நிதானமாக செயல்படவேண்டிய காலம், ஆனால் செவ்வாயின் தாக்கம் வேகமாகவே செயல்பட செய்யும். நிதானத்துடன் செயல்பட்டால் பிரச்சனைகள் குறையும்.
துலாம்
செவ்வாயும் சனியும் இணைவதால் துலாம் ராசியினரின் குடும்பத்தில் சலசப்புகள் ஏற்படும். திட்டமிட்ட நிகழ்ச்சிகளை ஒத்தி போட வேண்டியிருக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு மனதில் நிம்மதியின்மையை ஏற்படுத்தும். வேலை தேடுபவர்களுக்கு ஏமாற்றத்தை தரும் சனீஸ்வரரின் மந்தமான தன்மையால் மனதில் சோர்வும் சலிப்பும் உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ