செவ்வாய் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், அதிகபட்ச கவனம் தேவை
Mars Retrograde: செவ்வாயின் வக்ர நிலையால், சில ராசிக்காரர்களுக்கு மிக மோசமான பலன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கலை சந்திக்கவுள்ள ராசிகள் எவை?
செவ்வாய் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் விளைவு: அக்டோபர் 30 முதல் செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ளது. அதாவது, செவ்வாய் தனது இயல்பான இயக்கத்துக்கு எதிர் இயக்கத்தில் உள்ளது. செவ்வாய் நவம்பர் 13 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருப்பார். இதன் பிறகு ரிஷபம் ராசிக்குள் நுழைவார்.
செவ்வாயின் வக்ர நிலை 12 ராசிகளிலும் கண்டிப்பாக சில பலன்களை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும் சிலருக்கு கெட்ட பலனும் கிடைக்கும். செவ்வாயின் வக்ர நிலையால், சில ராசிக்காரர்களுக்கு மிக மோசமான பலன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கலை சந்திக்கவுள்ள ராசிகள் எவை? இந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
செவ்வாய் கிரகத்தின் வக்ர நிலை, மேஷ ராசியினருக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில், விவாதம் காரணமாக, தேவையற்ற சண்டைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
செவ்வாயின் வக்ர நிலையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எரிச்சல் அதிகரிக்கும். இந்த நேரத்தில், பலருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு சச்சரவுகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பாக சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதல் விவகாரங்களுக்கும் இந்த நேரம் நல்லதல்ல. வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாயின் வக்ர நிலை, ஆரோக்கியத்தில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோபம் மற்றும் ஈகோவை கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால், பேசுவதற்கு முன் சற்று நிதானமாக யோசித்து பேசுவது நல்லது. முதலீடு செய்ய இந்த நேரம் சரியில்லை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரியின் கோபத்தை சந்திக்க வேண்டி வரலாம். வெற்றிகரமாக நடக்க வேண்டிய வேலைகள் முடியாமல் தடைபடலாம். உங்கள் தந்தையுடன் நல்ல உறவைப் பேணுங்கள். உங்கள் அவசர புத்தியால் நீங்கள் தேவை இல்லாத விவாதங்களில் சிக்கிக்கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் வாகனத்தை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். செவ்வாயின் வக்ர நிலையால், விபத்துக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. நிதானமாக நடந்துகொண்டால் இவற்றை தவிர்க்கலாம்.
மீன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சொத்துகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சரியல்ல.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்; இனி ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ