சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் சனி பகவான். அனைத்து கிரகங்களிலும் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். அவர் ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறார். இதன் காரணமாக, அனைத்து கிரகங்களையும் விட, சனி பகவானின் தாக்கமும் ராசிகளின் மீது அதிகமாக இருக்கும். எனினும், நியாய தர்மத்துடன் தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள் சனி பகவானை கண்டு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் சனி மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிப்பவர் ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது கர்ம வினைகள் நன்றாக இருந்தால், சனி நம் வாழ்வை பார்த்துக்கொள்வார். ஏழரை சனி மற்றும் சனி தசை காலங்களிலும் அவர் குறைந்தபட்ச எதிர்மறை விளைவுகளையே அளிப்பார். ஆகையால் சனி நமக்கு அள்ளிக்கொடுப்பதும், கிள்ளிக்கொடுப்பதும் நன் கையில்தான் உள்ளது. 


ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் அனைத்து ராசிகளின் வாழ்விலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். அவர் இன்னும் இரு நாட்களில், அதாவது ஜூன் 17 அன்று கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். அதாவது சனி தனது இயக்கத்தை எதிர் திசையில் மாற்றுவார். நவம்பர் வரை அவர் இந்த வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் அவர் வக்ர நிவர்த்தி அடைவார்.


சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு தொட்டதெல்லாம் ஜொலிக்கும். சென்ற இடமெல்லாம் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி 


கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்தவுடன் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுக்கு ஆசிகளைப் பொழிவார். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். கடின உழைப்பு பலன் தரும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆகையால் இந்த நேரத்தில் நீங்கள் கடினமாகவும் தன்னலமின்றியும் உழைத்தால், சனியின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 


மேலும் படிக்க | 141 நாட்களுக்குப் பிறகு, இந்த ராசிகளுக்கு கஷ்டம், நஷ்டத்தை தருவார் சனி


ரிஷப ராசி 


சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக உருவாகும் கேந்திர திரிகோண யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த யோகத்தால் இவர்களது நிதி நிலை வலுப்பெறும். வேலை மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.


மிதுன ராசி


சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். நீங்கள் கை வைக்கும் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கைகூடும். நீண்ட நாட்களாக வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் இந்த காலத்தில் உள்ளது. 


மகர ராசி 


மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். லாபகரமான நல்ல ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள். இவை உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தரும். நீங்கள் இந்த காலத்தில் செய்யும் அனைத்து பணிகளிலும் சனி பகவான் உதவியாக இருப்பார். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.


இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கடகம், கும்பம், துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். உடல் நலனில் அக்கறை தேவை. சனி பகவானை மகிழ்விக்க சனி சாலிசா, கோளறு பதிகம் போன்ற ஸ்தோத்திரங்களை தினமும் சொல்வது நல்லது. அடுத்த நான்கைந்து மாதங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குருவால் அடுத்த 11 மாதம் பண வரவு, இந்த ராசிகளுக்கு நிதி ஆதாயம் பெருகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ