வக்ர சனியால் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்
Shani Vakri: இந்த ராசிக்காரர்களுக்கு வக்ர சனி கேந்திர திரிகோண ராஜயோகம் மூலம் அதிர்ஷ்டத்தை அளிப்பார்.
கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தங்கள் ராசிகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இதன் காரணமாக அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது, நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைய தயாராகி வருகிறார். தற்போது நீதிக்கடவுள் சனி, தனது ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அவர் இந்த ராசியில் இருப்பார். இப்போது, ஜூன் 17, 2023 இரவு 10.48 மணிக்கு, கும்ப ராசியிலேயே அவர் வக்ர பெயர்ச்சி ஆகவுள்ளார். மேலும் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து அவர் திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவார்.
நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். அதே சமயம் மற்ற கிரகங்களின் ராசி மாற்றங்களின் காரணமாக சனி பகவான் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவார். வேத ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்ம பலன் மற்றும் நீதிக்கு காரணமாக கருதப்படுகிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். அனைத்து ராசிகளிலும் இவர் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். சனியின் அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும்.
வக்ர சனியின் விளைவுகள்
சனி பகவான் வக்ர நிலையில் நகர்ந்தால், அது வக்ரி சனி என்று அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது, சனி எதிர் திசையில் நகர்வது போல் தெரிவார். புவியியல் ரீதியாக சனியின் இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஜோதிட ரீதியாக தற்போது வக்ர சனியால் 'கேந்திர திரிகோண ராஜயோகம்' உருவாகி வருகிறது.
கேந்திர திரிகோண ராஜயோகம் என்றால் என்ன
ஜோதிட சாஸ்திரப்படி 3 கேந்திர ஸ்தானங்களான 3, 4, 7 மற்றும் 10 திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 ஆகியவை ஒன்றுக்கொன்று கூட்டணி அமைக்கும் போது அல்லது அம்சம் மற்றும் ராசி மாறினால், கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. அன்னை லட்சுமிக்கு திரிகோன ஸ்தானத்தின் தேவி என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விஷ்ணு பகவான் கேந்திர தெய்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேந்திர திரிகோண ராஜயோகத்தில் ஒன்பதாம் ஸ்தானம் உச்சம் பெற்றால் சில ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி யோகம் உண்டாகும். இது பண முதலீடு, உடல்நலப் பலன்கள், வேலை கௌரவம் போன்ற பலன்களைத் தருகிறது.
இந்த ராசிக்காரர்களுக்கு வக்ர சனி அதிர்ஷ்டத்தை அளிக்கும்
ரிஷப ராசி:
சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகப் போகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்கார்ரகளுக்கு அதிக பலன் தரும். சனி பகவான் உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரனின் நண்பர். இத்தகைய சூழ்நிலையில், ரிஷபத்தின் பத்தாம் வீட்டில் அவர் வக்ர நிலைக்கு மாறுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும். தொழில், வியாபாரம் உள்ளிட்ட வேலைகளில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். முதலீடு செய்து லாபம் பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். வருமானமும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் மேல் அதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்க்கையில் அதிக லாபம் பெறுவீர்கள், புதிய சொத்து வாங்கும் யோகம் தற்போது உள்ளது.
மேலும் படிக்க | சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை 2023: இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட்
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரம் சாதகமாக அமையும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வணிகம் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படலாம். நீதிமன்ற விவகாரங்களிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்திற்கு சாதகமான காலமாக இது இருக்கும். வேலையில் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். சனி உங்கள் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் கேந்திர மற்றும் ஷஷ ராஜயோகத்தை உருவாக்குவார். உத்யோகம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நாள்பட்ட நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
துலா ராசி:
சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் திரிகோண ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். வங்கி - முதலீட்டில் லாபம் கிடைக்கும். இதனுடன், திருமண வாழ்க்கையிலும் வெற்றிக்கான அறிகுறிகள் உள்ளன. பணியிடத்தில் உங்கள் பணியால் மகிழ்ச்சியடைந்து, உயர் அதிகாரிகள் சில பெரிய பொறுப்புகளை வழங்கலாம். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறக்கூடும்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
கடக ராசி:
சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிக எச்சரிக்கை தேவை. குறிப்பாக, கடக ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள். விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். வாழ்க்கையில் சில பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசி:
சனியின் வக்ர இயக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு மன இறுக்கத்தை அதிகரிக்கும். இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். இந்த முடிவு எதிர்காலத்தில் வருத்தத்திற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையிலும் சிரமங்கள் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அச்சச்சோ! செவ்வாய் சனியால் இந்த ராசிகளுக்கு விபரீதம், எச்சரிக்கை தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ