மாத ராசிபலன்: இவைதான் ஜூன் மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள், வெற்றி மழையில் நனைவார்கள்

June 2023 Lucky Zodiac Sign: ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சிம்மம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜூன் மாதத்தில் ஏற்படவுள்ள கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். 

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் நிலையை மாற்றுகின்றது. கிரகங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. 

 

1 /7

ஜூன் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இவற்றில் சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றமும், சனியின் வக்ர பெயர்ச்சியும் 12 ராசிகளையும் பாதிக்கும். சனி கும்ப ராசியில் 140 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.   

2 /7

கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளில் இருந்தாலும் சில ராசிகளில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது பொருளாதார நிலை வெகுவாக மேம்படும். தொழில் துறையிலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. ஜூன் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

3 /7

மிதுனம்: ஜூன் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணமும் லாபமும் உண்டாகும். பண வரவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களிலும் நல்ல லாபம் ஈட்டுவதில் வெற்றி கிடைக்கும்.

4 /7

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். மாத இறுதியில், புதன் உங்கள் 11 ஆம் வீட்டில் அமர்ந்து நிதி விஷயங்களில் உங்களுக்கு பல நன்மைகளைத் தருவார். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பங்குகள் மூலம் லாபம் கூடும்.  

5 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். செல்வம் பெருகும். கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டாகும்.

6 /7

தனுசு: பணம் ஈட்டுவது சுலபமாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பணம் சம்பாதிப்பதுடன், பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். 

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.