இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை.. ஏன்? காரணம் தெரியுமா?
Trigrahi Yog Effect 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழைகிறது. இதன் போது பல சுப, அசுப யோகங்கள் உருவாகின்றன. இன்று சிம்மத்தில் சந்திரன் நுழைவதால் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.
சந்திரன் பெயர்ச்சி பலன்கள் 2023: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும். கிரகங்கள் இணையும் போது தான் யோகங்கள் உருவாகும். அந்த வகையில் இன்று ஜூலை 20 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு சந்திரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். சந்திரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்ததால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. ஏனெனில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஏற்கனவே சிம்ம ராசியில் உள்ளனர். தற்போது மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைந்து திரிகிரக யோகத்தை உருவாகும். இந்த கிரக மாற்றம் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சில ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். எனவே இந்த காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இன்று தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
இன்று சந்திரனின் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரப்போகிறது. மேலும் மேஷ ராசியினருக்கு திரிகிரக யோகம் நிதி ரீதியாக சாதகமானதாக இருக்கும்.இதன் போது இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், துறையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுமட்டுமின்றி, உங்களின் பணியை அதிகாரிகள் பாராட்டுவார்கள், அதன் பலனை எதிர்காலத்தில் நீங்கள் காண்பீர்கள். இதுமட்டுமின்றி பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும்.
மேலும் படிக்க | நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் மீது அருள் மழை பொழிவார் சனி பகவான்
மிதுன ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் மிகவும் சிறப்பான பலனைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு பொருளாதார லாபம் உண்டாகும். எதிர்காலத்தில் நன்மை தரும் சொத்துக்களை வாங்கலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் நீதித்துறை விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட பணிகளை முடிக்க முடியும். உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்வீர்கள். சில வேலைகளுக்காக வெளியூர் செல்ல நேரிடலாம்.
சிம்ம ராசி
சிம்மத்தில் செவ்வாய், சந்திரன், சுக்கிரன் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் துறையில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். மறுபுறம், குழந்தைகளின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் போன்றவை கிடைக்கும். இத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் இந்த யோகத்தால் பலன் பெறுவார்கள். உங்கள் முதலீடுகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். c\ \
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ