செப்டம்பர் மாதம் கிரகங்களின் ராசி மாற்றம் 2022: செப்டம்பர் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் சூரியன் கிரகம் மற்றும் சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்ற போகின்றன. இந்த இரண்டு (சூரியன் மற்றும் சுக்கிரன்) பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தென்படும். இருப்பினும், ஒரு ராசி அடையாளத்தில் மட்டும் இந்த கிரகங்களின் பெயர்ச்சியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அந்த ராசி எந்த ராசி என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் எந்த கிரகத்தின் ராசி மாற்றம் எப்போது வரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்-


கிரகங்களின் ராஜாவாக அழைக்கப்படும் சூரியன் தைரியம் மற்றும் வலிமையின் காரணியாகக் கருதப்படுகிறார். அந்தவகையில் செப்டம்பர் 17 ஆம் தேதி 2022, சனிக்கிழமை காலை 07:35 மணிக்கு சூரியன் கிரகம் தனது ராசியை மாற்றுகிறார். மறுபுறம் சுக்கிரன் கிரகம் சௌகரியம், செல்வம், காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, ஆடம்பரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த கிரகம் செப்டம்பர் 24 ஆம் தேதி 2022, சனிக்கிழமை இரவு 09:14 மணிக்கு தனது ராசியை மாற்றுகிறார்.


மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 



கிரகப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்-


செப்டம்பர் 24 ஆம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன் கிரகம் பிரவேசிக்கும், மேலும் இந்த கிகரம் அக்டோபர் 18 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும், அதன் பிறகு துலாம் ராசிக்குள் நுழையும். அதேபோல் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரித்து, அக்டோபர் 17 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். அதன் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிப்பார் சூரியன் கிரகம். எனவே சூரியன் மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால், கிரகப் பெயர்ச்சி பலன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் தெரியும். மேலும் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவது கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தரும்.



(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ