எச்சரிக்கை... சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை பாடாய் படுத்தும்: ரொம்ப சூதானமா இருக்கணும்!!
Shani Vakri 2023: நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். வக்ர சனியால் பாதிப்புக்கு ஆளாக உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. சனிக்கும் தனிச்சிறப்பான இடம் உண்டு. பொதுவாக சனி பகவானை பார்த்து அனைவரும் அஞ்சுகிறார்கள். ஒருவர் மீது சனியின் பார்வை பட்டுவிட்டால், அவருக்கு பல பிரச்சனைகள் வரத் தொடங்கும் என கருதுகிறார்கள். ஆனால், அது அப்படி அல்ல. சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அளிக்கும் கிரகமாவார்.
சனி நாம் நல்ல செயல்களை செய்தால், நமக்கு பல நன்மைகளை செய்கிறார். அவரது அருள் பார்வை இருந்தால், ஏழை கூட அரசனாகிவிடுவான். அதே சமயம் நாம் தீய செயல்களில் ஈடுபட்டால், அவரது கோவப்பார்வை நம் மீது விழுகிறது. அப்போது அரசனும் ஆண்டியாவான். சனி பகபான் நீதியின் கிரகமாக கருதப்படுகிறார். இந்த நேரத்தில் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த காலகட்டத்தில், பல ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தின் கீழ் உள்ளனர். பலர் ஏழரை சனியிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு அதன் இரண்டாம் கட்டம் நடக்கிறது. ஜூன் 17 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இந்த நேரம் மிக பாதகமாக இருக்கும். ஆகையால், இந்த காலத்தில் இந்த ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. வக்ர சனியால் பாதிப்புக்கு ஆளாக உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசி
சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்கள் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரும். அதே நேரத்தில், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக வேலைப்பளு காரணமாக உடல் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த நேரம் வணிக வகுப்பினருக்கு சாதகமாக இல்லை.
மேலும் படிக்க | ஜாக்பாட்! சனியால் இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் நாளை முதல் மினுமினுக்கும்
கடக ராசி
சனிபகவான் கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த காலம் அத்தனை சாதகமாக இருக்காது. குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் பணித் துறையில் அதிக கடின உழைப்பு தேவைப்படலாம், ஆனால் அது அதிக பயனளிக்காது. வாகனம் ஓட்டும்போது சிறப்பு கவனம் செலுத்துங்கள். வாழ்க்கையில் சில பெரிய சவாலை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
துலா ராசி
சனியின் வக்ர பெயர்ச்சியால் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற நிலை ஏற்படும். வேலையை மாற்ற நினைத்தால், சிறிது காலம் காத்திருப்பது நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் எங்கு வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே வரும் காலங்களில் உங்களுக்கு பல வித அதிர்ஷ்டங்களும் நற்பலன்களும் கிடைக்கும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.
கும்ப ராசி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூன் 17 ஆம் தேதி, சனி கும்ப ராசியில்தான் வக்ரமாகப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களும் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் எதிலும் எந்த பெரிய முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் பின்னர் வருத்தப்படலாம். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி ஜெயந்தி 2023: சனி தோஷம் சனி தோஷம் இருக்கா இந்த பரிகாரம் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ