சனி ஜெயந்தி 2023: சனி தோஷம் சனி தோஷம் இருக்கா இந்த பரிகாரம் பண்ணுங்க

Shani Dosh Nivaran Upay: எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதில் சிக்கிக் கொள்வீர்களா? நிதி நெருக்கடி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்படியானால், ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கக்கூடும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, மே 19 அன்று கொண்டாடப்படும் சனி ஜெயந்தியில் நீங்கள் சில சிறப்பு பரிகாரங்கள் செய்தால் போதும்.

 

ஜாதகத்தில் சனி தோஷத்தை நீக்குவது எப்படி: சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஒவ்வொருவரின் செயல்களுக்கேற்ப பலனைத் தருவார் சனி பகவான். சனி ஒருவர் மீது கோபமடைந்தால், அவரை அழிவிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறப்படுகிறது. சனியின் தீய பார்வையில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புவதற்கும், அவரை வணங்குவதன் மூலம் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பதற்கும் இதுவே காரணம். வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை வழிபடுவதற்கு உகந்ததாகக் கருதப்பட்டாலும், வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் வரும் சனி ஜெயந்தி மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

1 /5

நாளை சனி ஜெயந்தி: வைகாசி மாதம் அமாவாசை நாளில் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த முறை இந்த நாள் மே 19 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வருகிறது. உங்கள் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது வேலைகளில் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, அது ஏழரை சனி அல்லது சனி தசையின் காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி ஜெயந்தி அன்று சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களைப் போக்கலாம். அந்த சிறப்பு பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /5

சனி தோஷம்: நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான். அதேபோல் கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பல விதமான கோச்சார பலன்களை தருகிறார்.  

3 /5

இந்த ராசிகளுக்கு நெருக்கடி: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கிறது. மறுபுறம், சனி தசை விருச்சிகம், கடகத்தில் நடக்கிறது. அதாவது, இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு சிக்கல் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நெருக்கடியிலிருந்து விடுபட சனி ஜெயந்தி அன்று சனி தேவரை மகிழ்விக்க வேண்டும்.  

4 /5

சனி ஜெயந்தி பரிகாரம்: சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.  

5 /5

இந்த ராசிக்காரர்கள் இதை செய்யுங்கள்: ஜோதிடர்களின் கூற்றுப்படி, விருச்சிகம் மற்றும் கடகம் ராசிக்காரர்கள் சனி ஜெயந்தியன்று கடுகு எண்ணெய், வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்யலாம்.