ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் தனது ராசி மாறப் போகிறார். இந்நாளில் குரு மீனத்தில் இருந்து மேஷ ராசியில் பிரவேசிப்பார். ஜோதிட நம்பிக்கைகளின்படி, குரு சில ராசிக்காரர்களுக்கு ராசியை மாற்றி சிறப்பு ஆசிகளை வழங்குவார், மேலும் சில ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் ஜோதிடத்தில் குரு பகவான் பிருஹஸ்பதிக்கு தனி இடம் உண்டு. மேலும் 27 நட்சத்திரங்களில் புனர்வசு, விசாகம், பூர்வ பாத்ரபத நட்சத்திரங்களுக்கு அதிபதி குரு ஆவார். குருவின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரகளுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது முடிவடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.


ரிஷபம்: குடும்பத் தொழிலில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வேலையில் உங்களால் சிறந்ததைச் செய்ய முடியாமல் போகலாம். காதல் உறவில் நீங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் காணலாம்.


மேலும் படிக்க | புதன் அஸ்தமனம்: பலத்த நஷ்டத்தை சந்திக்கப்போகும் இந்த 4 ராசிகள்...!


மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நற்பலன்களை அளிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.


கடகம்: குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும்.  


சிம்மம்: இவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித் தரும். இது சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். 


கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். பதவி - கௌரவம் அதிகரிக்கும். மக்கள் உங்களை அதிகமாக மதிப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல காலம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.


துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரும் மாதம் இனிமையாக இருக்கும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறில் சிக்கிக் கொள்ளலாம்.


விருச்சிகம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, விருச்சிக ராசிக்காரர்கள் வியாழனின் சஞ்சாரத்தால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை. குடும்பத்தில் தகராறு ஏற்படக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


தனுசு: குருவின் இந்த பெய்ர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சாதகமாக அமையும். இந்த நேரம் மகர ராசியினருக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு மாறும் வாய்ப்புக் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை பலம் பெறும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல வெற்றிகள் வந்து குவியும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வேலைகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும். காலப்போக்கில் சூழ்நிலைகள் சாதகமாக மாறும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும்.


மீனம்: வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக முடியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த 5 ராசிகளுக்கு கவலையே இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ