குரு பெயர்ச்சி 2023 - இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வெற்றி, பண வரவு: முழு ராசிபலன் இதோ

Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2023, 12:04 PM IST
  • மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
  • நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள்.
  • உங்கள் நிதி நிலையும் மேம்படும்.
குரு பெயர்ச்சி 2023 - இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வெற்றி, பண வரவு: முழு ராசிபலன் இதோ

குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அது 12 ராசிகளின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இது சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழையவுள்ளார். ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. 

ஜோதிடத்தின் படி, குரு தற்போது மீனத்தில் அமர்ந்துள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் அவர் பெயர்ச்சியாகவுள்ளார். இதனுடன் சூரியனும் புதனும் மீன ராசியில் உள்ளனர். மீனத்தை விட்டு வெளியேறிய பிறகு, மே 1 வரை மேஷ ராசியில் குரு இருக்கப் போகிறார். குரு மேஷ ராசியில் நுழையும் போது அனைத்து 12 ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். இந்த தாக்கம் சிலருக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு குருவின் இந்த பெயர்ச்சி சுமாரான விளைவுகளையே அளிக்கும். குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பெயர்ச்சியின் போது, மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அவசரம் காரணமாக சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம். ஆகையால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். முன்பை விட அதிகமாக சேமிக்க முயற்சி செய்வீர்கள். செயல்களிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரத்தால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் இந்த காலகட்டத்தில் நல்ல பலனைத் தரும். வருமான வழிகள் அதிகரிக்கும். வருமானம் பெருகும், நபரின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | குரு - ராகு கூட்டணி: தொல்லைக்கு உள்ளாகும் ஐந்து ராசிகள்... கண்ணும் கருத்துமாக இருங்க!

கடக ராசி

இந்த காலத்தில் கடக ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய சலுகைகள் கிடைக்கும். பயண வாய்ப்புகள் உருவாகும். இந்த காலத்தில்  பயணங்களால் லாபம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கலாம்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். ஏற்கனவே சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரத்தால் முதலீட்டில் லாபம் கிடைக்கும். கூட்டு சேர்ந்து வேலை செய்வதால் வியாபாரம் பெருகும். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

துலாம்

குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம்.

விருச்சிகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, விருச்சிக ராசிக்காரர்கள் வியாழனின் சஞ்சாரத்தால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை. குடும்பத்தில் தகராறு ஏற்படக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தனுசு

குருவின் இந்த பெய்ர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மகரம்

இந்த நேரம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும்.

கும்பம்

குரு பெயர்ச்சி காலத்தில் அதிகபட்ச சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். இந்த வேலையில் உங்கள் மனைவி உங்களுக்கு உதவுவார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்

ஜோதிடத்தின் படி, மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலையும் மேம்படும், வாங்கிய கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முடியும். மன அமைதி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த ராசிகளுக்கு பண வரவு தாரளமாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News