பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்! குபேரரின் செல்லப் பிள்ளைகளின் ராசி இது
Lord Kuber Blessings: இந்த ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரர்களாக மாறும் யோகத்துடன் பிறக்கிறார்கள், குபேரரின் ஆசி பெற்ற ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கம் ஒரு நபரின் இயல்பில் தெரியும். ஒவ்வொரு நபரின் இயல்பும், விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டவை. அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாகும் வரம் ஒரு சிலருக்கே உண்டு. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ராசிக்காரர்களுக்கு குபேரரின் ஆசிகள் என்றும் நிலைத்திருக்கும். இந்த நபர்கள் செல்வத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். குபேரரின் அருளாசி பெற்ற 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மகரம்
ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் கடவுளான குபேரனின் சிறப்பு ஆசிகளும் உண்டு. வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சவாலையும் மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். அதில் வெற்றி பெற்று வாழ்பவர்கள் மகர ராசிக்காரர்கள். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இவர்களின் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் பணக்காரர்கள் என்று சொல்லலாம். இவர்கள் பணம் சம்பாதிப்பதில் வித்தியாசமான ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் முன்னேற யாருடைய ஆதரவும் தேவையில்லை. வாழ்க்கையில் எந்த விதமான சுகத்திற்கும் பஞ்சமில்லை.
இவர்கள் எந்த வேலையையும் முழு அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, வெற்றி பெற முடிந்த அனைத்தையும் முயற்சி செய்யும் பிடிவாதக்காரர்கள்.
மேலும் படிக்க | விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். தனது புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கும் திறமை படைத்தவர்கள்.
குபேரர், குறிப்பாக இவர்களிடம் அன்பாக இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர்களின் பொருளாதார நிலையையும் சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்வார் குபேரர். இர்வர்களுக்கு செல்வ மகளின் அருட்கடாட்சமும் உண்டு. விரும்பியதைப் பெற்று வாழும் யோகம் படைத்த ராசிக்காரர்கள் இவர்கள்.
மேலும் படிக்க | மீனத்துக்கு எச்சரிக்கை! சுப செலவு எந்த ராசியினருக்கு?
கடகம்
ஜோதிடத்தின் படி, கடக ராசிக்காரர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர்கள். இதுமட்டுமின்றி, அவர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்றவர்கள்.
எல்லா துறையிலும் மரியாதை பெறும் ராசியான கடக ராசிக்காரர்கள், பொருளாதார நிலையிலும் மிகவும் வலிமையானவர்கள். பணம் சம்பாதிப்பதுடன், பணம் சேர்ப்பதிலும் வல்லவர்கள். கடக ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் பெரிய மனிதர்களாக மாறி சமூகத்தில் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்குவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ