விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!

ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும் போது சுக்கிர திசை அடித்துள்ளது எனக் கூறும் வழக்கம் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2022, 01:23 PM IST
  • சுக்கிரன் நவம்பர் 11 ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
  • பொருளாதார நிலையில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள்.
  • சுக்கிரனின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்.
விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்! title=

ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும் போது சுக்கிர திசை அடித்துள்ளது எனக் கூறும் வழக்கம் உள்ளது. அப்படிப்பட சுக்கிரன் ராசியை மாற்றும் போது, அது ஒருவரது பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

சுக்கிரன் நவம்பர் 11 ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நவம்பர் 20, 2022 அன்று, சுக்கிரன் விருச்சிகத்தில் உதயமாகி இருப்பது, ஜோதிட சாஸ்திரத்தின்படி, 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரனின் உதயத்தால் பெரிதும் நன்மை அடைவார்கள். அவர் வாழ்வில் செல்வம், சுகம், அன்பு பெருகும். இந்த நபர்கள் தொழில் மற்றும் பொருளாதார முன்னணியில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள்.

சுக்கிரனின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்!

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணப் பலன்களைப் பெறுவார்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் தோன்றும். அதிகரித்த வருமானம் இவர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் அன்பு பெருகும்.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 

கும்பம்:

சுக்கிரன் நட்சத்திரத்தின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு தூங்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பும். சுக்கிரன் அஸ்தமனத்தால் இதுவரை இருந்த பிரச்சனைகள் இப்போது விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கூடும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தம் செய்யலாம். லாபம் இரட்டிப்பாகும். வேகமாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உதயம் சுப பலன்களைத் தரும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வெற்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். படிப்பு அல்லது வேலைக்காக வெளியூர் செல்லும் கனவு நனவாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைக்கும். மனக்கசப்பு, சச்சரவுகள் நீங்கும். எந்தவொரு பெரிய கனவையும் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் நிறைவேற்ற முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News