புதன் பெயர்ச்சி டிசம்பர் 2022: மகர ராசியில் புதன் சஞ்சாரம் யாருக்கு என்ன பலன்களைத் தரும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். புதன் பெயர்ச்சி யாருக்கு நல்லது செய்யும் யாருக்கும் மத்திமமாக இருக்கும்?  நீங்கள் அதிர்ஷ்டசாலியா? உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக அமையுமா? உங்கள் பணி வாழ்க்கையின் அடுத்த சில ஆண்டுகள் எப்படி இருக்கும்? நீங்கள் விரும்பும் வேலை கிடைக்குமா? என நமது எதிர்காலத்தைப் பற்றி கணித்துக் கூறும் ஜோதிடக்கலை, இந்த ஆண்டின் இறுதி வாரத்தில் நிகழவிருக்கும் கிரகங்களின் பெயர்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறது?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் தேவையான பதில்களை அறிந்துக் கொள்ள சில முக்கியமான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  


மகர ராசியில் புதன் பெயர்ச்சி
28 டிசம்பர் 2022 அன்று மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. புதனின் இந்த சஞ்சாரத்தின் விளைவுகள் மற்றும் அவற்றின் தீமைகளை குறைக்கவும், நன்மைகளை அதிகரிக்கவும் என்ன செய்வது என்று தெரிந்துக் கொண்டு வாழ்வில் வளம் பெற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும். 


மேலும் படிக்க | Eclipse 2023: 2023 புத்தாண்டில் ஏற்படவிருக்கும் சூரிய சந்திர கிரகணங்கள்


புதன் கிரகம், கிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் கிரகமாகும். புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தொடர்பு திறன் கொண்ட ஒரு இளமையான அழகான கிரகமாக கருதப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில், மிதுனம், கன்னி ஆகிய இரு வீடுகளின் அதிபதியான புதன், நமது நுண்ணறிவு, நினைவாற்றல், கற்றல் திறன், பேச்சு, தொடர்பு, அனிச்சை மற்றும் தகவல் தொடர்பு திறனுக்கு அதிபதியாக இருக்கிறது.


வணிகம், வங்கி, கல்வி, தகவல் தொடர்பு, எழுத்துத் திறன், புத்தகங்கள் படித்தல், அறிவுத் தேடல், நகைச்சுவை என அனைத்து வாழ்க்கை செயல்களுக்கும் மகிழ்ச்சிக்கும் காரகராக திகழ்கிறார் புதன்.


மகர ராசியில் புதன் சஞ்சாரம்: நேரம்
மகர ராசியில் புதன் பெயர்ச்சி டிசம்பர் 28, புதன்கிழமை அதிகாலை 04:05 மணிக்கு நடைபெறுகிறது. தனது சொந்த ராசியான மகரத்திற்கு, அதன் அதிபதி வருகிறார். மகரம் என்பது நமது ராசி மண்டலத்தின் பத்தாவது வீடு. இது சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் வீடு.


எனவே, இந்த ராசியில் சனியின் தாக்கமும் உள்ள நிலையில், இங்கு புதன் சஞ்சாரம் செய்வது அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தைக் கொண்டு வரும்.  இருந்தாலும், எந்த ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சஞ்சாரம் நல்ல பலனைக் கொடுக்கும்?


மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!


மகர ராசியானது பெண் தன்மை கொண்டது என்றும், பொருள் சார்ந்தது என்றும் கருதப்படுகிறது. றுவன ஒழுங்குமுறை பணிக்கான கடமை மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கும் மகரத்தில் புத்திக் காரகன் புதன் செல்வது பணி, தொழில் வர்த்தகம், கடமை என பல காரணிகளுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.


புதனுக்கு நட்பு ராசியான மகரம் தர்க்கரீதியான வாக்குவாதங்களுக்கும் காரகர் என்பதால், சிந்தனை, எழுத்து, செயல் என புத்தி அதிகம் பயன்படும் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்லதாக இருக்கும். 


மகர ராசியில் புதன் சஞ்சரிப்பதால், ஊடகத்துறையினர், மக்கள் தொடர்பு, கணக்காளர்கள், நிதித்துறை மற்றும் முதலீட்டு வங்கியாளர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். எந்த தசாபுத்தி நடக்கிறது என்பதைப் பொறுத்து புதன் பெயர்ச்சியின் விளைவு இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 2023 மகர சங்கராந்தியில் சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ