டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

2022  டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால், பெரும் பண வரவை பெற்று அமோகமான வாழ்க்கையை பெறும் ராசிகள் எவை என தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2022, 06:45 PM IST
  • தொழில் துறை, வியாபாரம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும்.
  • பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
  • பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்! title=

டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி, புதன் கிரகம் தனுசு ராசிக்குள் நுழைந்தது. மேலும் சுக்கிரனும் தனுசு ராசியில் சஞ்சரித்துள்ளார். டிசம்பர் 16ம் தேதி சூரியனும், டிசம்பர் 28ம் தேதி புதனும், மகர ராசியில் சஞ்சரிக்கிறார்கள். டிசம்பர் 29ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியிலும், புதன் டிசம்பர் 31ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசியிலும் பிரவேசிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு டிசம்பரில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் சாதகமாக இருக்கும். டிசம்பரில் உள்ள கிரகங்களின் நிலை, அலுவலக வேலை செய்யும் வகுப்பினருக்கு நல்ல பலனைத் தரும். நீங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த மாதம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.

மகரம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, டிசம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் தரும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் துறை, வியாபாரம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் வேலை மாற்றத்தைப் பற்றி நினைத்தால், இந்த மாதத்தில் பல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு இனிமையாக இருக்கும்.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

சிம்மம்

ஒவ்வொரு மாதமும் சில கிரகங்களின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர்  மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் தடைப்பட்ட வேலைகள் இந்த மாதத்தில் நிறைவேறும். தொழிலதிபர்களும் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் எந்த புதிய வேலையையும் தொடங்கலாம். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எங்காவது பயணம் செய்ய திட்டமிடலாம். அதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பரம் பாசமும் அன்பும் அதிகரிக்கும்.

மிதுனம்

ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. இந்த மாதம் தொழிலில் வெற்றிகரமானதாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் இந்த மாதத்தில் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. பண ஆதாயம் உண்டாகும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பாசமும் உண்டாகும்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: அறிவாற்றலை அள்ளித் தரும் 'புதன் கிரகம்' வலுவாக இருக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News