ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இராசி மாற்றங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின் படி, செப்டம்பர் 16, 2023 அன்று, புதன் சிம்மத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜோதிடத்தில், புதன் புத்தி, தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியாகக் கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தில், புதன் பேச்சுத் திறனுக்கான காரணியாகவும் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, சூரியனும் சுக்கிரனும் புதனின் நண்பர்கள், சந்திரனும் செவ்வாயும் அதன் எதிரி கிரகங்கள். அத்தகைய சூழ்நிலையில், புதன் சிம்மத்தில் வக்ர நிவர்த்தி அடைய இருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. புதனின் வக்ர நிவர்த்தியினால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுன ராசி


புதனின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருவதாக கருதப்படுகிறது. உண்மையில் புதனின் வக்ர நிவர்த்தி காரணமாக, ​​இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். புதன் நேரிடையாக இருக்கும் காலத்தில் பணம் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.


கடக ராசி


புதனின் வக்ர நிவர்த்தி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. உண்மையில், புதனின் வக்ர நிவர்த்தி காரணமாக, வேலையில்லாமல் இருக்கும் இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பணம் சம்பாதிக்க பொன்னான வாய்ப்புகள் அமையும். உங்கள் பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன்களும் அங்கீகாரமும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி.. தீபாவளி முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


கன்னி  ராசி


கன்னி ராசிக்காரர்களுக்கு, புதனின் வக்ர நிவர்த்தி பல விஷயங்களில் சாதகமாக கருதப்படுகிறது. புதன் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு, கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வேலையை மாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த மாற்றம் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் சாதகமானதாக இருக்கும். இக்காலகட்டத்தில் உத்தியோகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கூடும். இத்துடன் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.


விருச்சிக ராசி


புதனின் வக்ர நிவர்த்தி விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும், செல்வமும் நிறைந்திருக்கும். உண்மையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் புதன் பகவானிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கூடும். மொத்தத்தில், புதன் பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் முதல் கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ