சனியின் தாக்கத்தால் வலுப்பெறும் ராகு: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்

Rahu Transit: சனி கிரகத்தால் ராகு வலுவடைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்களுக்கு அது அதிகப்படியான பலன்களை அளிக்கும்.
ராகு கோச்சார பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகத்தின் ராசியில் மாற்றம் ஏற்பட்டு, வேறு ஒரு கிரகத்துடன் யோகம் உருவாகும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றது. பொதுவாக, கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்களையும் அளிக்கும். ராகு கிரகம் தற்போது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறது. மேஷம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது.
இதனுடன், மகர ராசியில் சனிபகவான் இருக்கிறார். மேலும் அவர் வக்ர நிலையில் இருக்கிறார். மகர ராசியில் வசிக்கும் போது சனியின் நான்காம் கேந்திர பலன் மேஷ ராசியில் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த யோகத்தால் ராகுவுக்கு சனிபகவானின் தாக்கம் வந்துவிட்டது. இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பதால் இது ராகுவை சக்தி வாய்ந்ததாக மாற்றியுள்ளது.
இந்த ராசிகளுக்கு மிக நல்ல நேரம்
சனி கிரகத்தால் ராகு வலுவடைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்களுக்கு அது அதிகப்படியான பலன்களை அளிக்கும். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, ராகுவின் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும். இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றம் மிக விரைவாக நடக்கும். அதுமட்டுமின்றி பண ஆதாயமும் உண்டாகும்.
மேலும் படிக்க | சனியின் நிலை மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் பெருகும்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் கௌரவம் உயரும். இது தவிர, அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் நடக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தவிர பதவி உயர்வுக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இந்த காலகட்டத்தில் அதிகப்படியான வசதிகளை அனுபவிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வீரம், தைரியம் அதிகரிக்கும். இருப்பினும், திருமண வாழ்க்கையில் சில பதட்டங்கள் இருக்கலாம். பண வரவால் நன்மை உண்டாகும். தொழிலில் பதவி உயர்வு பெறலாம். வருமானம் கூடும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்நாட்களில் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ