சனியின் நிலை மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் பெருகும்

Saturn Transit: சனி பகவானின் நிலை மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2022, 03:46 PM IST
  • கடக ராசியில் ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கடக ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
  • தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
  • ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
சனியின் நிலை மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் பெருகும் title=

மகர ராசியில் சனியின் இயக்கம்: பொதுவாக சனி பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சிலர் அவரை கொடூர கிரகமாகவும் நினைக்கிறார்கள். எனினும், நமது கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார் அவர். அவர் மக்களுக்கு அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 முதல் மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தை துவக்கவுள்ளார். சனி பகவானின் இந்த நிலையால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் காணப்படும். எனினும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனியின் இயக்கத்தால் இந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும்

மேஷம்

பஞ்சாங்க குறிப்புகளின் படி, சனி பகவான் மேஷத்தின் பத்தாம் வீட்டில் இருக்கிறார். அவர் அக்டோபர் 23 முதல் நேர் இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளார். சனி பகவானின் இந்த இயக்கத்தால், வியாபாரத்தில் கடினமாக உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழில் துறையில் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும்.

மேலும் படிக்க | மகாளய பட்சம்: வீடு தேடி வரும் முன்னோர்கள் மனம் குளிர தானம் செய்ய வேண்டியவை! 

கடகம்

கடக ராசியில் ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கடக ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

துலாம்

தற்போது துலாம் ராசியில் சனியின் தசை நடந்து வருகிறது. அக்டோபரில் மகர ராசியில் சனி பெயர்ச்சி அடைவதால் இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் பணப் பற்றாக்குறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடு லாபகரமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். உங்களது வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலுக்கான வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சண்டைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

மீன ராசியில் சனி பகவான் லாப வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News