இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை ஆரம்பம்: அள்ளித்தருவார் சனி-புதன்
Budh Gochar 2024 : வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி அதாவது நாளை கிரகங்களின் இளவரசனான புதன் கும்ப ராசியில் பெயர்ச்சியடையப் போகிறார். இதனால் சனி புதன் சேர்க்கை நடைபெற்று அதிர்ஷ்டம் உண்டாகும்.
கும்ப ராசியில் சனி புதன் சேர்க்கை பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வணிகம், பங்குச் சந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதேசமயம் நீதியின் கடவுளாக சனி பகவான் கருதப்படுகிறார். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி அதாவது நாளை புதன் பெயர்ச்சியடைப் போகிறார், சனியின் ராசியான கும்பத்தில் புதன் பெயர்ச்சியாகி சனியுடன் சேர்க்கை ஏற்படும். ஜோதிடத்தில் சனி மற்றும் புதன் கிரகத்தின் சேர்க்கை மிகவும் பயனுள்ள மற்றும் மங்களகரமாக கருதப்படும். சனி மற்றும் புதன் சேர்க்கையால் 12 ராசிகளையும் பாதிக்கும். இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும், சில ராசிகளுக்கு தீய பலனையும் ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த சேர்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
புதன்-சனி சேர்க்கையால் பெரிய பலன்களை பெறப்போகும் ராசிகள்:
மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, புதன் சேர்க்கையால் சாதகமான பலன் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கலாம். நிலுவையில் இருந்த மிதுன ராசிக்காரர்களின் வேலைகள் அனைத்தும் முடிவடையும். வெளியூருக்கு சுற்றுலா பயணம் செல்லலாம். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் பெறுவீர்கல், அதனுடன் ஆதரவையும் பெறுவீர்கள். வருமானம் உயரும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். தொழில் செய்யும் மிதுன ராசியினருக்கு ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.
மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!
மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்கு அதிபதியும் சனி பகவான் ஆவார். அப்படிப்பட்ட நிலையில் புதன் பெயர்ச்சியால் உருவாகப் போகும் சனி மற்றும் புதன் சேர்க்கையால் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். மேலும் இந்த ராசிக்காரர்களுக்குப் பணம், பேச்சு போன்றவற்றால் நன்மைகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு தானவே பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்யும் மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைவார்கள். வருமானத்தில் உயர்வு இருக்கும். சுப செலவுகள் உண்டாகும், செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசியிலேயே புதன் பெயர்ச்சி ஏற்பட்டு சனி மற்றும் புதன் சேர்க்கையானது கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்பை பெறுவீர்கள். அதனுடன் புகழையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆடம்பர பொருட்கள், மாடலிங், ஊடகம், கலை மற்றும் இசை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் இந்த காலத்தில் அதிகப்படியான வெற்றி காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ