திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!

பிப்ரவரி 20ஆம் தேதி புதன் பெயர்ச்சி ஆகப் போகும் நிலையில், மகர ராசியில் திரி கிரேசி யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் செல்வ வளங்கள் அனைத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை பெறுவார்கள்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2024, 09:16 AM IST
  • நீண்ட நாள் ஆசைகள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!

ஜோதிடத்தில் கிரக பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் கிரகப் பெயர்ச்சியினால், அபூர்வ யோகங்களும் அபூர்வ சேர்க்கைகளும் உருவாகின்றன. இதனால், சில ராசிக்காரர்களுக்கு மிக சாதகமான பலன்களும் கிடைக்கும். பிப்ரவரி மூன்றாவது வாரத்தில், புதன் பெயர்ச்சியாக போகும் நிலையில், புதன் பெயர்ச்சியினால், கும்ப ராசியில் மூன்று கிரகங்கள் இணைகின்றன. இதனால் உருவாகும் திரிகிரஹி யோகம், சில ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கையை கொடுக்கும். அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

மேஷ ராசி

மேஷ ராசிகளுக்கு, புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும், எதிர்பாராத வகையில் நிறைவடைந்து மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். எதிரிகள் கூட உங்கள் திறமையை பார்த்து வியந்து பாராட்டும் நிலை ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சுப காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிகளுக்கு இந்த வாரம், மிகவும் பிசியான வாரமாக இருக்கும். இருப்பினும் உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கிறது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பார்த்த வெற்றியும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு முழு ஆதரவை கொடுப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது சிறந்த காலகட்டம். வேலை வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிகளுக்கு தொட்டது அனைத்தும் துலங்கும் காலமாக இந்த புதன் பயிற்சி காலம் இருக்கும். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, மனதிற்கு நிம்மதி ஏற்படும். வாழ்க்கையில் நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நலம் விரும்பிகள் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு பெரிதும் உதவுவார்கள். நிதி ரீதியாகவும் உங்களுக்கு நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு உண்டு. இடமாற்றம் கூட ஏற்படலாம். இடமாற்றத்தினால் முன்னேற்றமும் உண்டாகும்.

துலாம் ராசி

துலாம் ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும், உங்கள் விருப்பப்படி நிறைவேறும். அதற்கான பலன்களும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புகளும் கைமேல் பலன் கொடுக்கும். பணியிட மாற்றம் வேண்டி இருப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான முடிவு ஏற்படும். ஆன்மீக இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்! 

கும்ப ராசி

கும்ப ராசியினரின் நீண்ட நாள் ஆசைகள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். நிலம் சொத்து தகராறு ஏதேனும் இருந்தால், அதில் உங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் பணிகள் பாராட்டப்பட்டு அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உறவுகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் கை கொடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News