சனிப்பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தின்படி, சனியின் ராசி மாற்றம் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதிலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படும். அந்த வகையில், ஜனவரி 17, 2023 அன்று சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறது. இது அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி சிலரது வாழ்வில் இன்னல்கள் இருக்கும், சிலரது வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எனவே சனிப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிப் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாறும்


மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கும் நல்ல நேரம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். நிறுத்தப்பட்ட பணம் திரும்பிக் கிடைக்கும்.


மேலும் படிக்க | பொங்கலோடு பிறந்த நல்ல நேரம்..! அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்


ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். வாழ்வில் இருந்த தடைகள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வரவு உண்டாகும். தொழிலில் ஏற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.


துலாம் ராசி: சனிப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தடைகள் நீங்கும். புதிய வேலையில் சேருவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பெரிய பொறுப்பு கிடைக்கும். தொழில் தொடங்க நல்ல நேரம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.


தனுசு ராசி: சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். சனியின் அருள் அனைத்து துன்பங்களையும் துக்கங்களையும் நீக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். மரியாதை அதிகரிக்கும். மக்கள் உங்களைப் புகழ்வார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ