இந்தியாவில்  4 வகையான நவராத்திரி பண்டிகைகொண்டாடுகின்றது. ஆனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும்  சுக்ல பட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி , புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும், சுக்ல பட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி, தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும்  சுக்ல பட்ச பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பட்ச பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி ஆகியவை முக்கியமாக கொண்டாடப்படும் நவராத்திரிகள் ஆகும். வட இந்தியாவில் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை சைத்ரா நவராத்திரி காலம் ஏப்ரல் 22ம் தேதி முதல் மார்ச் 30 தேதி வரை உள்ள காலமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுவதாக கூறப்படுகிறது. அபூர்வமாக இந்த சைத்ர நவராத்தியின் போது 4 கிரகங்களின் சங்கமம்  ஏற்பட உள்ளது. இந்த அபூர்வ நிகழ்வு 110 ஆண்டுகளுக்குப் பிறகு காணப்படுகிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.


மேலும் படிக்க | சைத்ர நவராத்திரி 2023: அன்னை துர்கையின் அருளை முழுமையாக பெறும் ‘சில’ ராசிகள்


மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம்  ஆகிய ராசிகள் தான் இந்த அதிர்ஷ்ட ராசிகள். வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு மனதிற்கு திருப்தியையும் தரும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. இதனுடன், ஒரு புதிய உறவைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கல்வித் துறையில் பெரும் வெற்றிகளைப் பெற்று மாணவர்கள் சாதிப்பார்கள். இத்துடன் பல வாய்ப்புகளும் கிடைக்கும். தடைபட்ட வேலைகள்  நிறைவடையும், நீண்ட நாட்களாக வாட்டி வந்த  உடல்நலக் கோளாறுகள் நீங்கும். மொத்தத்தில், இந்த நவராத்திரி காலத்தில் இந்த ராசிகள் மங்களகரமான பலன்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ