பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 09 ஆம் 2022 தேதி அன்று புதன் கிரகம் பெயர்ச்சி இருக்கும். சுக்கிரனின் இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடக்கும். சூரிய கிரகத்தின் மூன்றாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 17, 2022 தேதி அன்று நடக்கும். இதற்குப் பிறகு, புதன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். எனவே, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் மூன்று கிரகங்களின் மாற்றம் குறிப்பிட்ட இந்த 3 ராசிகளுக்கு மட்டும் நேரடி பலன்களை தரும் அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் கிரகப் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளித் தரும். இந்த நேரத்தில் வியாபாரிகள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் மூலம் வருமானத்தைப் பெறலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். 


மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்


துலாம்- கிரகங்களின் நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி முன்னேற்றம் அடையலாம். இதனுடன், அரசு வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறலாம். பணி நடை மேம்படும். பண வரவுகள் அமோகமாக இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.


சிம்மம்- ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் சூரியன், சுக்கிரன், புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் அள்ளித் தரும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண யோகம் கைகூடும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ