மீனத்தில் சதுர்கிரஹி யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!
Most Lucky Zodiacs of Chaturgrahi Yogam: கிரக பெயர்ச்சிகள் காரணமாக சில நேரங்களில் பிற கிரகங்களுடன் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது.
Most Lucky Zodiacs of Chaturgrahi Yogam: கிரக பெயர்ச்சிகள் காரணமாக சில நேரங்களில் பிற கிரகங்களுடன் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சதுர்கிரஹி யோகம் உருவாகப் போகிறது . இந்த யோகம் சுக்கிரன், புதன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும்.
ஏப்ரல் மாத பெயர்ச்சிகள்
ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி, புதன் மீன ராசியில் சஞ்சரிப்பார். இவர் மே மாதம் பத்தாம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் மீனத்தில் பிரவேசிப்பார். செல்வ வளங்களை அள்ளி கொடுக்கும் சுக்கிரன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். ராகு ஏற்கனவே மீன ராசியில் உள்ளார். இந்நிலையில், புதன், செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது.
சதுர்கிரஹி யோகத்தின் அதிர்ஷ்ட ராசிகள்
செவ்வாய் பெயர்ச்சியினால் ஏற்படும் சதுர்கிரஹி யோகம் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் வெற்றி ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும். தவிர, இந்த நபர்களுக்கு அவர்களின் வேலைகளில் பதவி உயர்வு மற்றும் உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கும். முதலீடுகள் மூலம் வருமானம் பெருகும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
கடக ராசி
செவ்வய் பெயர்ச்சியினால் ஏற்படும் சதுர்கிரஹி யோகம் கடக ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளையும் அதிகம் பெறுவீர்கள். ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த நேரத்தில், வேலை -வணிகம் தொடர்பான காரணங்களுக்காக நீங்கள் உள்ளூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். மேலும், இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மேலும் இது வரை தடைபட்டு வந்த பணிகளும் முடிக்கப்படும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசி
செவ்வாய் பெயர்ச்சியினால் உண்டாகும் சதுர்கிரஹி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ஜாதகத்தின் கர்ம வீட்டில் அமையப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள், தொழில் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மேலும், இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடி வரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். முயற்சிகளுக்கு பலன் இருக்கும். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். மேலும், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம்.
தனுசு ராசி
செவ்வாய் பெயர்ச்சியினால் ஏற்படும் சதுர்கிரஹி யோகம் தனுசு ராசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை வசதிகள் மேம்படும். மேலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். அதே நேரத்தில், உங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். ஆச்சரியத்தை கொடுக்கும் செய்தியை நீங்கள் பெறலாம். நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். ரியல் எஸ்டேட், சொத்து, மருத்துவம் மற்றும் உணவு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல இலாபம் காண்பார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | புதனின் இடப்பெயற்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ