மேஷத்தில் இணையும் ராகு-சுக்கிரன்! நிதி நெருக்கடியை சந்திக்கும் ‘3’ ராசிகள்!
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கிரகம் சமீபத்தில் ராசி மாறி மேஷ ராசியில் நுழைந்தது. மேஷத்தில் ஏற்கனவே ராகு உள்ள நிலையில், ராகு மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தின் படி, தற்போது ராகு கிரகம் மேஷத்தில் உள்ளது. மறுபுறம், மார்ச் 12, 2023 அன்று, சுக்கிரன் பெயர்ச்சி ஆகி மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் மேஷ ராசியில் ராகு, சுக்கிரன் இணைவு உருவாகியுள்ளது. ராகு அசுப மற்றும் நிழல் கிரகமாக கருதப்படுகிறது. அதனால்தான் மேஷ ராசியில் சுக்கிரனும் நிழல் கிரகமான ராகுவும் இணைவது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை 3 ராசிகளுக்கு மிகவும் நெருக்கடியை உண்டாக்கும். இவர்கள் ஏப்ரல் 6ம் தேதி வரை கவனமாக இருக்க வேண்டும். இதற்குப் பிறகு சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைவார்.
ராகு சுக்கிரன் சேர்க்கையினால் சிக்கலை சந்திக்கும் ராசிகள்!
மேஷம்:
சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை மேஷத்தில் இருப்பதால், இவர்கள் எல்லோரையும் விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நெருக்கடியை சமாளிக்க தயாராக இருங்கள். இரகசிய எதிரிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் ஏமாற நேரிடலாம். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் வாழ்க்கை துணையை கவனித்துக் கொள்ளுங்கள், அவரை கவனமாக நடத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கூட சுக்கிரன், ராகு சேர்க்கை நல்லதல்ல. நிதி விவகாரங்களில் கவனம் தேவை. உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம். குடும்பப் பெரியவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். போக்குவரத்து விதிகளை கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கை துணையை கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் அவருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
மேலும் படிக்க | கஜகேசரி யோகத்தால் கெட்டகாலம் முடிந்து பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்!
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை பெரும் தொல்லைகளை ஏற்படுத்தும். பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்கள் காத்திருக்க நேரிடலாம். மகிழ்ச்சி குறையலாம். வருமானம் குறையலாம். மதிப்பு இழப்பு ஏற்படலாம். இந்த நேரத்தை பொறுமையாக கடக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் அனுமாங்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ