மீனத்தில் புதன் குரு சேர்க்கை 2023: செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியான புதன் மார்ச் 16 ஆம் தேதி அதாவது நேற்று மீன ராசியில் பெயர்ச்சியானார். மறுபுறம், குரு பகவான் ஏற்கனவே மீனத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வழியில், மீனத்தில் புதன் மற்றும் குரு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ஜோதிடத்தில், வலுவிழந்த ராசியான மீனத்தில் புதன் இருப்பது சுபமாக கருதப்படவில்லை எனினும் இதே ராசியில் குரு இருப்பதால், அசுப பலன் சுப பலனாக மாறிவிட்டன. இப்போது மீனத்தில் புதன் மற்றும் குரு சேர்க்கை 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் நல்ல விளைவை ஏற்படுத்தும்.
புதன் பெயர்ச்சியால் உருவாகும் குரு-புதன் சேர்க்கை இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன், குரு சேர்க்கை சிறப்பான பலன்களைத் தரும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வருமானத்தில் வலுவான அதிகரிப்பு இருக்கும். பெரிய சம்பளத்துடன் புதிய வேலையில் சேரலாம். தற்போதைய வேலையில் உயர் பதவி பெறலாம். உயர்கல்வியில் வெற்றி உண்டாகும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படும்.
மேலும் படிக்க | மீனத்தில் சங்கமித்த 3 கிரகங்கள்..! செல்வமழை எதிர்கொள்ளபோக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்
மிதுன ராசி: புதன் மற்றும் குரு சேர்க்கை மிதுன ராசிக்காரர்களின் தொழிலுக்கு சுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் பொருள் இன்பம் பெருகும். வருமானம் கூடும். சமூகத்தில் மரியாதை கூடும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
கன்னி ராசி: புதன் மற்றும் குரு சேர்க்கையால், கன்னி ராசிக்காரர்களுக்கு பண வரவு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய நன்மைகளைத் தரும். வியாபாரம் விரிவடையும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிற்கும் குரு மற்றும் புதன் இணைவது சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தாயிடமிருந்து உதவி கிடைக்கும்.
மீன ராசி: குரு மற்றும் புதன் சேர்க்கை மீன ராசியிலேயே நடைபெறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்கள் உண்டாகும். பிஸியாக இருந்தாலும் வேலையில் வெற்றியும் கிடைக்கும். பதவி உயர்வு காணலாம். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா செல்லலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ