ராகு-கேது பெயர்ச்சி 2023: ராகு கேது பொதுவாக கோப குணம் கொண்ட கிரகமாக கருதப்படுகிறது. எந்தவொரு நபரின் ஜாதகத்திலும் அவர்களின் பலவீனமான நிலை அவரது வாழ்க்கையில் பல சிக்கல்களை இது உருவாக்கும். அதன்படி ராகு-கேது கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம், அவை மக்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றன. அவர்களின் பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும். அந்தவகையில் 2023ல் அக்டோபர் 30ம் தேதி தான் இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி: ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் பணத்திற்காக கவலைப்பட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு விபத்து ஏற்படலாம். செய்த முதலீட்டில் நஷ்டம் ஏற்படலாம். குடும்பச் சண்டை மன அமைதியைக் குலைக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரல் 27 குரு உதயம்: கோடியில் புரளபோகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்


ரிஷப ராசி: ராகு-கேதுவின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் நெருக்கடியை சந்தித்து நேரிடும். இந்தப் பெயர்ச்சியால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களுடன் மோதல் ஏற்படலாம். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.


கன்னி ராசி: கேது கிரகம் அக்டோபர் 30 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறது. இதனால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில்-வியாபாரத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பல வேலைகளில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கடன் கொடுத்த பணம் மூழ்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை ஓட ஓட விரட்டும்: ஆபத்தான ‘139 நாட்கள்’!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ