Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!

நிழல் கிரகமான கேது, அடுத்த 4 மாதங்களுக்கு குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களை பாடாய் படுத்த உள்ள நிலையில், பாதிக்கப்படும் ராசிகளையும், அதிலிருந்து தப்பிக்க , சில எளிய ஜோதிட பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2022, 01:00 PM IST
  • மோசடிகளில் சிக்க நேரிடலாம். பணியிடத்தில் நஷ்டம் ஏற்படலாம்.
  • கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
  • உங்களை நிரூபிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்! title=

கேது நிழல் கிரகம் என்று கூறப்படுகிறது. விஞ்ஞானக் கண்ணோட்டத்தில், சூரிய குடும்பத்தில் ராகு மற்றும் கேது இருப்பதற்கு இயற்பியல் சான்றுகள் இல்லை. ஆனால் இந்த கிரகங்களுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் உள்ளது. ராகு-கேது இரண்டும், பொதுவாக கெடு பலன்களை கொடுக்கும் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. எனினும் சில நேரங்களில் சுப பல்ன்களைகளையும் கொடுக்க கூடியது. சனிக்குப் பிறகு, ராகு-கேது இரண்டு கிரகங்கள் மட்டுமே ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் நீண்ட நேரம் எடுக்கும். அதனால்தான் இந்த கிரகங்களின் பெயர்ச்சி ஜோதிடத்தில் ஒரு பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருப்பது அந்த நபரின் வாழ்க்கை மிகவும் தொல்லைகள் நிறைந்ததாக வைத்திருக்கும். கேது கிரகம் தற்போது துலாம் ராசியில் அமர்ந்து இருக்கும் நிலையில், 2023 ஜனவரி வரை அந்த ராசியில் இருக்கும். துலாம் ராசியில் இவ்வாறு உறைந்திருப்பதால் 3 ராசிகளில் வாழ்க்கையில் நெருக்கடி மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. அந்த ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் குடும்பத் தகராறுகளைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர சண்டைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காதல் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும். காதல் துணையிடம் இருந்து பிரியும் சூழ்நிலை உருவாகலாம். வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தோல்வியை சந்திக்க நேரிடும். வீட்டில் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும், கடன் சுமையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

மீனம்:

மீன ராசிக்காரர்கள் அடுத்த 4 மாதங்களில் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பரம்பரை தோல் நோய் அல்லது வைரஸ் தொற்று இருக்கலாம். மோசடிகளில் சிக்க நேரிடலாம். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களை நிரூபிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் நஷ்டம் ஏற்படலாம். பேராசையைத் தவிர்த்து, இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்:

வருட இறுதியில் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடலாம். சொத்தில் முதலீடு செய்வீர்கள். ஆனால் அதில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடையே, உங்கள் மீது எதிர்மறையான உணர்வு இருக்கும். எனவே நிதானத்துடன் செயல்பட்டு இக்கட்டான நேரத்தை புத்தி சாதுர்யத்துடன் கழிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள் ஆனால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கேதுவின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்:

1. ராகு-கேது என்னும் நிழல் கிரகங்களின் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க, ராகு காலத்தில் துர்கா பூஜை செய்வது நல்ல பலன் கொடுக்கும். 

2. கேதுவின் நிலையினால் ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்க, ‘ஓம் ஸ்த்ரிம் ஸ்த்ரிம் ஸ்த்ரீம் ஸஹ கேதவே நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் விக்னங்களை நீக்கும் விநாயகப் பெருமானுக்கானது. இது கேதுவின் எதிர்மறை ஆற்றல்களை நிர்மூலமாக்க உதவுகிறது.

3. ராகு- கேது தோஷத்தில் இருந்து விடுபட, ‘ஓம் நமஹ பகவத் வாசுதேவாய’ மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும், பகவான் கிருஷ்ணரின் நடனமாடும் படத்தை முன் வைத்து ஜபிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.

4. ஏழைகளுக்கு நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் அல்லது போர்வைகள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். சமையல் எண்ணெய், கருப்பு எள் ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும். அதிகபட்ச பலனைப் பெற சனி, புதன் கிழமைகளில் அன்னதானம் செய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News