தினப்பலன், நவம்பர் 5, 2023: இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித வாழ்க்கையில் கிரக நிலைகளுக்கும், அவற்றின் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒருவரது நட்சத்திரம், ராசியை பொறுத்தும் அவர்களது குணாதிசயங்கள் மாறுபடும். 


மேஷம் 


இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.


ரிஷபம்


இன்று உங்களை தேடி ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.


மிதுனம்


இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


கடகம்


இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உடல் நலனில் கவனம் தெவை. 


சிம்மம்


இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். 


கன்னி


சில புதிய மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலையில் கொஞ்சம் தீவிரத்தைக் காட்டுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.


மேலும் படிக்க | தீபாவளிக்குப் பிறகு விருச்சிக ராசியில் சௌபாக்கிய சங்கராந்தி! சிம்மத்திற்கு நல்லது


துலாம்


துலா ராசிக்காரர்கள் சற்று மந்தமாகவே இன்றைய நாள் தொடங்கினாலும், பிறகு சூடு பிடிக்கும். பணியில், உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை மொத்த வியாபாரிகள் சற்று கவனமாக செயல்படவும்.


விருச்சிகம்


குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பரிசுகள் மற்றும் கெளரவம் கிடைக்கும். பணியிடத்தில், உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, வீண் செலவுகளை நிறுத்த வேண்டும். இன்று, மோதல் போக்குக் உங்களுக்கு பயனளிக்காது.


தனுசு


உங்கள் எண்ணங்கள் மேம்படும். தொழில் திட்டங்களை உற்சாகமாக முடிப்பீர்கள். பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இளைஞர்கள் தொழிலில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவார்கள். திருமண பேச்சுவார்த்தை வெற்றியாக நடைபெறும்.


மகரம்


இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணம் சம்பந்தமாக மனதில் பலவிதமான எண்ணங்கள் வரலாம். வியாபாரத்தை அதிகரிக்க புதிய வழிகளை யோசிப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு சாதகமாக நாள் இன்று. அதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம்.


கும்பம்


உங்களின் நட்சத்திரங்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றன. வருமானம் அதிகரிக்கும், திடீரென வரும் வேலைகளால், திட்டமிடப்பட்ட வேலைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணைக்கு பரிசு கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டியிருக்கலாம்.


மீனம்


வியாபாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை தீர்க்க நல்ல நேரம். சில புதிய நபர்களை சந்திப்பீர்கள், அது உங்களுக்கு நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டம் போடலாம். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜூ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ஆண்டு தீபாவளி வாரம் எப்படி இருக்கும்? அன்னை லட்சுமியின் ஆசி பெறும் ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22



Apple Link: https://apple.co/3yEataJ