Daily Horoscope: நடப்பது என்னவென்று ஓரளவாவது தெரிந்துக் கொண்டால்தான் அதற்கேற்றாற்போல செயல்பட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும்போது, எந்த விசயங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமென்று தெரியப்படுத்தும் ராசிபலன்கள் நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாய்ப்புகளும், சூழ்நிலையும் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய இன்றைய ராசிபலன் உங்களுக்காக...


இன்றைய ராசிபலன்


மேஷம்


வாழ்க்கையில் இன்று முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். அவை உங்களையும் குடும்பத்தினரையும் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். குடும்ப விவகாரங்களும், குடும்ப பிரச்சனைகளும் சாதகமாக தீரும் நாள், வாழ்க்கையில் நிம்மதியை நோக்கி பயணிக்க இந்த நாள் அடித்தளம் அமைக்கும்


ரிஷபம்


எடுத்த முயற்சிகளில் வெற்றியை அடையும் வாய்ப்புகள் தென்படுகிறது. நேரம் காலம் சாதகமாக உள்ளது. பழைய நண்பர் அல்லது தெரிந்தவர்களுடன் இணையும் வாய்ப்பு ஏற்படும், அது நன்மையாகவே இருக்கும்.  


மிதுனம்


இன்று உங்களுக்கு தெய்வ அனுகூலம் காத்திருக்கிறது. நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது வேலையில் கவனம் செலுத்தவும், எடுத்த வேலையை சரியாக செய்து முடிக்கவும்.  


கடகம்


சொல்லும் சொல்களை கவனமாக உச்சரிக்கவும். இன்று வாயால் அவப்பெயர் வாங்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. அவை பிரச்சனையை ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள்.  


சிம்மம்


தொழில்முறை லட்சியங்களை எட்டுவதற்கான நாள் இது. இலாபகரமான ஒப்பந்தம் இன்று அமைவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. அது, எதிர்காலத்தில் புதிய உச்சத்தை நோக்கி உங்களை செலுத்தும்.  


மேலும் படிக்க | நாளை உருவாகும் அபூர்வ யோகம்: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை


கன்னி


உங்கள் சமூக நிலை மேம்படும், புதிய நட்புகள் மற்றும் தொழில்முறை நன்மைகளுக்கு வழிவகுக்கும். புதிய தொழில் தொடங்குவது இன்று சாதகமாக இருக்கும். 


துலாம்


தொழில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்பு துலாம் ராசிக்காரரான உங்களுக்கு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல நாள் இன்று. புதிய முயற்சிகளை எடுப்பதை என்றும் தொடருங்கள், உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  


விருச்சிகம்


தனிப்பட்ட உறவுகள் மேம்படும், ஆனால் வேலையில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நண்பர்களுடனான உறவில் சற்று சுணக்கம் வரலாம். 


தனுசு


கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவருடன் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல நாள் இது. எதிர்கால துணை தொடர்பான தகவல்கள் தெரிய வரலாம். காதலிப்பவர்களும் இணக்கமாக இருக்கும் நாள் இது.


மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!


மகரம்


இல்லற வாழ்க்கைக்கு உகந்த நாள் இது. மனம் உல்லாசமாக இருக்கும். வாழ்க்கைய்ல் அடுத்தக் கட்டத்திற்குக் செல்வதற்கான திட்டங்கள் மனதில் உருவாகும். நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்க மனம் விரும்பும் நாள் இது.


கும்பம்


புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வணிகம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு எது நல்லது என்பதை, உங்களைவிட வேறு யாரும் சரியாக சொல்லிவிட முடியாது என்பதில் தெளிவாக இருங்கள். இல்லற வாழ்க்கை இணக்கமாக இருக்கும்.


மீனம்


பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு என்றாலும், அதற்கு நீங்களும் மரியாதை கொடுக்க வேண்டும். இன்று வேலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல நாள். திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மனம் மகிழும் செய்தி வரும்.


மேலும் படிக்க | ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் 7 கிரகங்கள் சிக்கினால்? கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ