Thai Amavasai 2025, Devotees Prayers In Rameshwaram Temple: இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு அமாவாசையும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மூதாதையர்களை வழிபட உகந்த நாளாக உள்ளது. நம்முடன் வாழ்ந்து மறைந்த மூதாதையர்களை நினைத்து மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று அவர்களக்கு படையலிட்டு, காகத்துக்கு உணவு வைப்பது பலரின் வழக்கமா உள்ளது. இதில் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தை அமாவாசையான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக ஐதீகம். இதனால், புண்ணிய நதிகள், குளங்கள், கடற்கரைகளில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வார்கள்.


தை அமாவாசை 2025: ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்


அந்த வகையில், தை அமாவாசை விரதம் வழிபாடு என்றாலே நாட்டின் வடக்கு பகுதியில் கங்கை நதி ஓடும் காசி நகரமும், அதற்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் ராமேஸ்வரம் நகரமும் அனைவருக்கும் நினைவுக்கு வரும் எனலாம். உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.


மேலும் படிக்க | தை அமாவாசை 2025... தோஷங்கள் அனைத்தையும் நீக்க... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்


பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திரம் ஓதுபவர்களிடம் சென்று தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்மபூஜையை செய்தனர். பின்னர் பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பைப்புல் ஆகியவற்றை எடுத்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.


தை அமாவாசை 2025: ராமேஸ்வரம் கோவில் நடை எப்போது வரை திறந்திருக்கும்?


இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன. 29) ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் நடை, இன்று அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்பட்டது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடந்தது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது.


வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் நிலையில், அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்றும் இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து, கோயிலுக்குள் உள்ள 22 புனித  தீர்த்தமாடி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு வருகின்றனர்.


தை அமாவாசை 2025: தமிழ்நாடு முழுவதும்...


தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மட்டுமின்றி கன்னியாகுமரி திருவேணி சங்கமம், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரை உள்ள பகுதிகள், குற்றால அருவிகள், தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதி, மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா கட்டம், காவிரி ஓடும் திருச்சி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் என பல்வேறு தலங்களில் பக்தர்கள் குவிந்து தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


மேலும் படிக்க | தை அமாவாசை: தினசரி ராசிபலன்... இன்று இந்த 3 ராசிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ