சனிக்கிழமையில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..
Do Not Do These Things On Saturday : நாம், சனிக்கிழமையில் சில விஷயங்களை செய்யவே கூடாது என சில இதிகாசங்கள் எச்சரிக்கின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Do Not Do These Things On Saturday : கர்ம வினைகளுக்கு பதில் அளிப்பவராகவும், சிறந்த நீதி கொடுப்பவராகவும், கர்ம வினைகளுக்கு சிறந்த பதில் கொடுப்பவராகவும் கருதப்படுகிறார், சனி பகவான். இவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நாள், சனிக்கிழமை. கோபம், நேர்மை ஆகியவற்றிறு அடையாளமாக காண்பிக்கப்படும் சனி பகவானின் கோபத்திற்கு ஆள் ஆனால், வாழ்வில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வரலாம் என கூறப்படுகிறது. சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை, அவருக்கான சனிக்கிழமை நாளில் செய்யவே கூடாதாம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
அணிகலன்கள்:
இந்து மதங்களில் உள்ள புராணங்களின் படி, சனிபகவான் கருப்பு நிறத்தை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால்தான், மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கருப்பு நிற ஆடைகள் அணியக்கூடாது என கூறப்படுகிறதாம். இதனால், சனிக்கிழமைகளில் கருப்பு நிறத்தில் ஆடை அல்லது அணிகலன்களை அணிவது சனிபகவானுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி அணிபவர்களுக்கு தொழில் வாழ்வில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாம்.
துடைப்பம் வாங்குவது:
சனிக்கிழமையன்று மட்டுமல்ல, செவ்வாய் கிழமையிலும் கூட துடைப்பம் வாங்குவது ஒரு வீட்டில் நிதி நிலை பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, சனிபகவான் மட்டுமன்றி, செவ்வாயின் கோப பார்வையில் இருந்தும் தப்பிக்க, மேற்கூறிய நாட்களில் துடைப்பம் வாங்காமல் இருப்பது மிகவூம் நல்லது. இது, செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவியை கோபப்படுத்துமாம்.
மது அருந்துவது:
பொதுவாக, எந்த நாட்களில் மது அருந்தினாலும் உடலுக்கு தீங்குதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும், குறிப்பாக சனிக்கிழமைகளில் மது குடிப்பவர்கள் சனி பகவானின் கோபத்திறு ஆளாகிறார்களாம். இது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் பிரச்சனைகளை கூட்டலாம் என கூறப்படுகிறது.
எண்ணெய் வாங்குவது:
சனிபகவானுக்கு விருப்பமான சமையல் பொருட்களுள் ஒன்றாக கருதப்படுகிறது, கடுகு. இதனால், சனிக்கிழமைகளில் எந்த வகையான எண்ணெய்களையும் வாங்குவது துரதிர்ஷ்டம் என கூறப்படுகிறது. எனவே, சனிபகவானின் கோப கண்களில் இருந்து தப்பிக்க, அந்த நாளில் எண்ணெய் வாங்குவது என்பது கூடாதாம். அப்படி செய்தால், வீட்டில் கடன் அதிகரித்து, பலவித நிதி சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என கூறப்படுகிறது.
கத்திரிக்கோல் வாங்குவது:
வீட்டில் இருக்கும் முக்கிய பொருட்களுள் ஒன்று, கத்திரிக்கோல். பால் பாக்கெட்டை வெட்டுவது முதல், துணிகளை வெட்டுவது வரை அனைத்திற்கும் இதனை பயன்படுத்துகிறோம். சனிகிழமைகளில், பிற பொருட்களை வெட்டும் கத்திரிக்கோலை வாங்குவது, குடும்பத்தில் சில உறவுகளை வெட்டிவிட வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இது, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை அதிகரிக்க காரணமாக மாறிவிடுமாம். நண்பர்களின் உறவுகளும் இதனால் விட்டுப்போகலாம். எனவே, இந்த நாளில் கத்திரிக்கோல் வாங்குவதை தவிர்க்கவும்.
சாப்பிடக்கூடாதது:
பால் மற்றும் அது சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். அப்படி அந்த பொருட்களை சாப்பிட்டுவிட்டால், அதற்கு பரிகாரமாக மஞ்சள் அல்லது நாட்டுச்சர்க்கரையை தங்களின் உணவில் அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்.
மேலும் படிக்க | சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவைதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ