சூரிய கிரகணம் 2022: இன்று (அக்டோபர் 25 செவ்வாய்கிழமை) மாலை சூரிய கிரகணம் நிகழ உள்ள சூதக காலம் தொடங்கிவிட்டள்ளது. இந்த நேரத்தில் துளசி இலைகளை, செடிகளில் இருந்து பறிப்பது பாவத்தை சேர்க்கும். இந்து மதத்தில் துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்து மதத்தில் துளசி ஒரு தாயாக கருதப்படுகிறது. துளசி இலைகள் ஒவ்வொரு சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. கடவுளுக்கு நைவேத்தியம் செய்யும்போது துளசி இலைகள் அதில் போடப்படுகிறது. இன்று, சூரிய கிரகண நாளில் துளசி இலைகளை உணவில் போட்டு வைக்கும் வழக்கம் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இன்று துளசி இலைகளைப் பறிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.



கிரகணத்தன்று துளசி இலையை ஏன் மகா பாவம்?


இந்தியாவில் சூரிய கிரகண நேரம் இன்று மாலை 4:22 முதல் 5:41 மணி வரை இருக்கும், இன்று அதிகாலை 4:22 மணி முதல் சூதக் காலம் தொடங்கியது. இந்த சூதக் காலத்திற்கு முன்பே, துளசி இலைகள் உணவில் சேர்க்கப்படவேண்டும். இன்று துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது.


அதே போல அமாவாசை  நாளில் துளசி இலையை பறிப்பது பிரம்மாவைக் கொன்ற பாவத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை துளசி இலைகளை பறிப்பது பெரும் பாவத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு அருமருந்து துளசி! துளசியின் அபூர்வ மருத்துவ குணங்கள்


உணவுப் பொருட்களில் துளசியை போடுவது ஏன்?


உணவுப் பொருட்களில் மூலிகை என்று அறியப்படும், துளசி இலைகளைப் போடுவதற்கு, ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் இருக்கிறது. கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் இருக்கும் கதிர்கள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் சமைக்கப்பட்டு வைத்திருக்கும் உணவில் கிரணத்தின் கதிர்கள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.


அந்த உணவை உண்ணும்போது, அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். துளசி இலைகளில் பாதரசம் உள்ளது, இதனால் தான் துளசியை எந்த வகையான கதிர்களாலும் பாதிக்க முடிவதில்லை.  கிரகணத்தின் போது, ​​துளசி வானத்திலிருந்து வரும் எதிர்மறை சக்தியை நடுநிலையாக்குகிறது மற்றும் உணவுப் பொருள் எதிர்மறையான விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படும் என்று நம்பப்படுகிறது.


(பொறுப்புத் துறப்பு: பொதுவான அனுமானங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைளை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை இது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


மேலும் படிக்க | சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ