இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட கோ தானம் அதாவது பசுவை தானம் செய்த பலன் கிடைக்கும் என்கின்ற புராணங்கள். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அன்னை மகாலட்சுமியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் இதற்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர் உண்டானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தமமான இந்த விரத்தை கடைபிடிக்கையில், உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். அதோடு, இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் பெறுவதோடு, அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் விஷ்ணு அருள்புரிவார்.


இந்த பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்களை அர்பணித்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. எனினும், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க துளசி கலந்த தண்ணீரும் குடிக்கலாம். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. காலி வயிற்றில் தண்ணீர் குடுக்கும் போது அது வயிற்றையும் சுத்தமாக்குகிறது.


பங்குனி மாத சுக்ல பஷ ஏகாதசி திதி ஏப்ரல் 1, 2023 அன்று அதிகாலை 01:58 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 02, 2023 அன்று அதிகாலை 04:19 மணிக்கு முடிவடையும்.


ஆலமகீ ஏகாதசி விரத்தை கடைபிடிக்க செய்ய வேண்டியவை:


1. ஆலமகீ ஏகாதசி நாளில், விஷ்ணுவுக்கு 5 துளசி இலைகளுடன் மஞ்சளை கொண்டு ஓம் பூரிதா பூரி தேஹினோ, மா தப்ரம் பூரியா பர், பூரி கெதீந்த்ர திட்சஸி, ஓம் பூரிதா, த்யஸி ஸ்ருதஹ புருத்ரா ஷூர் விருத்ரஹன் ( ॐ भूरिदा भूरि देहिनो, मा दभ्रं भूर्या भर। भूरि घेदिन्द्र दित्ससि। ॐ भूरिदा त्यसि श्रुत: पुरूत्रा शूर वृत्रहन्।) என  மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். இதனால் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.


2. கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், பணம் சம்பாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ஆலமகீ ஏகாதசி அன்று விரதம் இருந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம என்ற மந்திரத்தை 5 முறை உச்சரிக்கவும். இதனுடன் ஒவ்வொரு ஏகாதசியிலும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யவும். இதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனை தீரும் என நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!


3. உங்கள் பணியில் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களின் முயற்சிகளை முறியடிக்க, ஆலமகீ ஏகாதசி நாளில் ஒரு பிடி அரிசியை குங்குமப்பூவைச் சேர்த்து சிவப்பு பருத்தி துணியில் கட்டி, விஷ்ணு கோயிலில் காணிக்கையாகப் படைக்கவும். இதன் மூலம் உங்கள் வேலையை எதிரணியால் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.


4. திருமண தடைகள் நீங்க, ஆலமகீ ஏகாதசி அன்று விஷ்ணு பகவானுக்கு மஞ்சளால் அர்ச்சனை செய்யவும்.  'ஓம் கேசவாய நமஹ' என்று அர்ச்சனை செய்யுங்கள். இதனால் விரைவில் திருமண வாய்ப்புகள் உருவாகும்.


5. உங்கள் இலக்கை அடைய எதிரி உங்களை தொந்தரவு செய்தால், காமதா ஏகாதசி அன்று ஸ்ரீ ஹரி விஷ்ணுவுக்கு 11 மஞ்சள் பூக்களை அர்ப்பணித்து, விஷ்ணு சாலிசாவை பாராயணம் செய்து, மறுநாள் இந்த மலர்களை ஆற்றில் பாய்ச்சினால், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் அனைத்து கஷ்டங்களையும் எதிர்கொள்ளும். அதற்கான சக்தியை நீங்கள் பெறுவீர்கள்.


6. அன்றைய நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேலும் இந்த ஆமலகி ஏகாதசி தினத்தன்று ஒரு கலசத்தில் ஏழு வகையான தானியங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மகாவிஷ்ணுவை வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் செவ்வாய் மஹாதிசை! தப்பிக்க செய்ய வேண்டியவை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ