அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!

Akshaya Tritiya 2023: ‘அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். அட்சய திருதியை திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் மகாலட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பார்கள். இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2023, 02:39 PM IST
  • அட்சய திருதியை அன்று ஏற்படும் 7 சுப யோகங்கள்.
  • ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை நாளில் சந்திரன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
  • அட்சய திருதியை அன்று விஷ்ணு பகவானை வழிபடவும்.
அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்! title=

அக்ஷய திருதியை 2023 : பஞ்சாங்கத்தின் படி, சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியில் அக்ஷய திருதியை பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். அட்சய திருதியை நாளில் மகாவிஷ்ணுவும் பல அவதாரங்கள் எடுத்ததாகவும் நம்பப்படுகிறது, எனவே அக்ஷய திரிதியை வேதங்களில் உகாதி திதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில் தான். பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் என புராணங்கள் கூறுகின்றன. திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர். இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை அன்று ஏற்படும் 7 சுப யோகங்கள்

திருமணம், அன்ன பிராசனம், முடி காணிக்கை அளித்தல், கிருஹபிரவேசன், புதிய வீடு வாகனம் வாங்குதல், புதிய வேலையைத் தொடங்குதல் போன்ற சுப காரியங்களுக்கு அட்சய திருதியை மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாள் இந்த அனைத்து மங்களகரமான வேலைகளையும் செய்ய ஒரு நல்ல நேரம். இந்த நாளில் செய்யப்படும் வேலை மிகவும் நல்ல பலன்களைத் தருவதாகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறப்பான பலனைத் தரும்.

இம்முறை ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை நாளில் சந்திரன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சந்திரன் ரிஷப ராசியில் இருப்பார். இது தவிர, மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் கிருத்திகை நட்சத்திரம் அட்சய திருதியை நாளில் இருக்கும். இது தவிர, அட்சய திருதியை நாளில் ஆயுஷ்மான் யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவியோகம், அமிர்த சித்தி யோகம், திரிபுஷ்கர யோகம் ஆகிய யோகங்கள் இருக்கும். அட்சய திருதியை நாளில் 7 அசுப யோகங்களின் சேர்க்கை இந்த நாளில் செய்யும் வேலைகளுக்கு பன்மடங்கு சுப பலன்களைத் தரும். பஞ்சாங்கத்தின் படி, அக்ஷய திரிதியை திதி ஏப்ரல் 22ம் தேதி காலை 7.50 மணிக்கு தொடங்கி 23 ஆம் தேதி காலை 7.48 வரை நீடிக்கும். இந்த நேரம் சுப காரியங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ராம நவமியும் சர்வார்த்தசித்தி யோகமும்! ‘இந்த’ ராசிகளின் எண்ணம் அனைத்தும் நிறைவேறும்!

அட்சய திருதியை அன்று விஷ்ணு பகவானை வழிபடவும்

அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவதும், ஹோமங்கள் செய்வதும் உங்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். இது தவிர, இந்நாளில் புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்யுங்கள். இந்த நாளில் அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கலாம். ஏழைகளுக்கு உணவு - உடையை தானமாக அளிக்கலாம். தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம். அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும் என்கின்றன புராணங்கள். குடும்பத்தில் வறுமை நீங்கும். கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வில் வளம் பெறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் செவ்வாய் மஹாதிசை! தப்பிக்க செய்ய வேண்டியவை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News