புதுடெல்லி: பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் பொன்னான வாய்ப்பு இன்று! பித்ருக்களின் தோஷம் நீங்க, சர்வ பித்ரு அமாவாசை தினமான இன்று இந்த விசேஷ பரிகாரத்தை செய்தால், உங்களுக்கு மட்டும் நல்லதல்ல, உங்கள் பரம்பரைக்கே நல்லது. உங்கள் மனதில் உள்ள வலி ​​மற்றும் துக்கம் நீங்கும். ஜோதிடத்தின் படி, பல வகையான தோஷங்களால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வர ஆரம்பிக்கின்றன. அந்த தோஷங்களில் முக்கியமான ஒன்று பித்ரு தோஷம். பித்ரா தோஷத்தை போக்கினால், வாழ்க்கையில் உங்களுக்கு உள்ள தடைகள் நீங்குவதோடு, உங்கள் மூதாதையர்களின் அருளாசியும் வாழ்க்கைப்பாதையில் ஏற்படுத்தும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சர்வபித்ரு அமாவாசை என்றும், மகாளய அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் இன்றைய நாள் அமாவாசை வந்துள்ளது. பித்ரு பக்ஷத்தின் போது, ​​15 நாட்கள், நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள்.


மேலும் படிக்க | மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி தடையின்றி கிடைக்க செய்ய வேண்டியவை


பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்களும், தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு விசார்ஜன் எனப்படும் புரட்டாசி மாத அமாவாசை அன்று தர்ப்பணம் மற்றும் சிராத்தம் செய்து மூத்தோருக்கான கடமைகளை செய்யலாம். இந்த நாளில் மூத்தோர்களுக்கான கடன்களை செய்யும் நல்வாய்ப்பு கிடைக்கிறது.  


பித்ரு தோஷம் என்றால் என்ன?


ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஜாதகத்தில் சூரியன் ராகு அல்லது சூரியன் சனி இரண்டாவது, நான்காவது, ஐந்தாம், ஏழாவது, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டில் உருவாகும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. சூரியன் துலாம் ராசியில் அல்லது ராகு அல்லது சனியுடன் இணைந்திருக்கும் போது பித்ரு தோஷத்தின் தாக்கம் அதிகரிக்கிறது.


அதுமட்டுமல்லாமல், இதனுடன் லக்னத்தின் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷம் காரணமாக, ஒரு நபரின் வாழ்க்கைகளில் பிரச்சனைகள் அதிகமாகும்.  


மேலும் படிக்க | மகாளய பட்சம்: வீடு தேடி வரும் முன்னோர்கள் மனம் குளிர தானம் செய்ய வேண்டியவை!


பித்ரா தோஷம் நீங்க பரிகாரம்


இந்த தோஷத்தைப் போக்க அமாவாசை நாளில் முன்னோர்கள் தொடர்பான கடமைகளை செய்ய வேண்டும். முன்னோர்களை நினைத்து பிண்டம் தானம் செய்வதுடன், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும்.


அமாவாசை நாளான இன்று, பசுவிற்கு உணவளிக்க வேண்டும். பசுவை வழிபடுவதும், காகத்திற்கு உணவிடுவதும், ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதும், பித்ருக்களின் அருளாசியைப் பெற்றுக் கொடுக்கும். 


மேலும் படிக்க | மகாளய பட்சம் 2022: முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ