மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி தடையின்றி கிடைக்க செய்ய வேண்டியவை.!!!

பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2022, 09:05 AM IST
  • மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி.
  • பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை.
  • நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது.
மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி தடையின்றி கிடைக்க செய்ய வேண்டியவை.!!! title=

பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம். 

அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | மகாளய பட்சம்: வீடு தேடி வரும் முன்னோர்கள் மனம் குளிர தானம் செய்ய வேண்டியவை!

மகாளய அமவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | மகாளய பட்சம் 2022: முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை!
 

Trending News