ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 2022: கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் ஒரு நாள் விரதம் அனுசரித்து, இந்த திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, பாத்ரபத மாதத்தின் தேய் பிறை (கிருஷ்ண பக்ஷ) அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணர் இந்த நாளில் பிறந்தார் என நம்பப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணரின் பிறந்தநாளான இந்த நாளில், மதுரா பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் போலவே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் தேதி குறித்தும் குழப்பம் நிலவுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதியா அல்லது ஆகஸ்ட் 19 ஆம் தேதியா என்பதை மக்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த குழப்பத்திற்கு விடை காணலாம் வாருங்கள்.


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 2022 எப்பொழுது கொண்டாடலாம்:


இந்த ஆண்டு பாத்ரபாத கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 9:20 மணிக்கு தொடங்கி மறுநாள் அதாவது ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு 10:59 வரை நீடிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா ஆகஸ்ட் 18 வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரின் பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று அவரை வழிபடுவார்கள்.


மேலும் படிக்க: Krishna Jayanthi: கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்? உறியடியின் பின்னணி ரகசியம்!


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று பூஜை செய்யும் நேரம்: முகூர்த்தம் மற்றும் யோகம்


அபிஜீத் முகூர்த்தம் - ஆகஸ்ட் 18 மதியம் 12:05 முதல் 12:56 வரை
விருத்தி யோகம் - ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 08:56 மணி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 08:41 மணி வரை.
துருவ யோகம் - ஆகஸ்ட் 18 இரவு 08:41 முதல் ஆகஸ்ட் 19 இரவு 08:59 வரை


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை


ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று, ஸ்ரீ கிருஷ்ணரை அலங்கரித்து, அவருக்கு அஷ்டகந்தா சந்தனம், அக்ஷதம் உட்பட பொருட்களை பூசி, பட்டு ஆடை அணிவித்து, அவர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி இருக்கும்படி அழகாக அலங்கரிப்பார்கள். அதன்பிறகு, பால், நெய், வெண்ணெய் மிஷ்ரி மற்றும் பிற பொருட்களை படைப்பார்கள். பூக்கள் தூவி மனதார வணங்குவார்கள். 


மேலும் படிக்க: சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ