மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் இரவில் தூங்கும் போது கண்டிப்பாக கனவு காண்கிறோம்.  அந்தக் கனவுகளுக்கு நிச்சயமாக சில அர்த்தங்களும் உள்ளன. சில கனவுகள் உண்மையாகவும் சில பொய்யாகவும் இருக்கும். சில கனவுகள் நனவாகும், சிலது நடக்காது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இரவில் தூங்கும் போது வரும் கனவுகள் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையவை மற்றும் அதற்கு சில சிறப்பு அர்த்தங்களும் உள்ளன. பலருக்கும் அவர்களது வேலை, வாகனம் தொடர்பான கனவுகள் வரும்.  சிலருக்கு அவர்கள் என்ன நினைத்து தூங்குகிறார்களோ அதை நினைத்து கனவு வரும். இந்நிலையில், உங்கள் கனவில் சிவபெருமான் தோன்றினால் அதற்கு அர்த்தம் என்ன? ஏன் உங்கள் கனவில் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Maha Shivratri Puja: அபிஷேகம் எப்படி எத்தனை நேரம் செய்யலாம்? எந்த திருமஞ்சனத்தால் கடவுளின் மனம் குளிரும்?


பல சமயங்களில் மக்கள் அவர்களது கனவுகளில் கடவுளையோ அல்லது அவர்களது குல தெய்வத்தையோ காண்கிறார்கள். பலருக்கும் தங்களது கனவில் தெய்வங்கள் தோன்றுவது நல்லதா அல்லது கெட்டதா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.  ஒருவேளை உங்கள் கனவில் சிவபெருமான் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.  இரவில் தூங்கும் போது நீங்கள் கனவில் சிவபெருமானைக் கண்டால், அதற்கு எதிர்காலத்தில் நீங்கள் நல்ல பலன்களை பெற போகிறீர்கள் என்று அர்த்தம். இது நல்ல ஒரு எதிர்காலத்தை கண் முன்னே காட்டுகிறது. உங்கள் கனவில் சிவபெருமான் தியான நிலையில் இருந்தால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. இது போன்ற கனவுகள் தொழில் அல்லது வருங்கால வாழ்க்கை பற்றி தொடர்பானவை. 


இத்தகைய கனவுகள் வந்தால் உங்கள் வாழ்க்கையில் பல வெற்றியைத் தரும். ஜோதிட சாஸ்திரங்களின்படி, உங்கள் கனவில் சிவலிங்கத்தைப் பார்த்தால் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று அர்த்தம். மேலும் சிவலிங்கத்தை கனவில் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது போன்ற கனவுகள் உங்களது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற உதவும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. உங்கள் கனவில் சிவலிங்கத்திற்கு தண்ணீர் கொடுப்பதை போன்று கண்டால், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம்.  ஒரு மாணவர் அவரது கனவில் சிவலிங்கத்தைக் கண்டால், அவர் விரைவில் அனைத்திலும் வெற்றி பெறப் போகிறார் என்பதற்கான அறிகுறியாகும். அதே நேரத்தில், ஒரு உழைக்கும் நபர் அவரது வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய போகிறார்.


அதே சமயம் ஒரு தொழிலதிபர் அவரது கனவில் சிவபெருமானையோ அல்லது சிவலிங்கத்தையோ கண்டால், அவரது தொழிலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி அடுத்த கட்டத்திற்கு போக போகிறது என்று அர்த்தம் ஆகும்.  மேலும், வியாபாரத்தில் முன்னேற்றம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். ஒருவர் தன்னுடைய கனவில் சிவலிங்கத்தை வழிபட்டால், அவரது வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும், அமைதியும் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். இது மட்டுமின்றி, எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்தும் விடுதலை பெறப் போகிறார் என்று அர்த்தம்.  திருமணமாகாத பெண் தன் கனவில் சிவலிங்கத்தைக் கண்டால், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்று அர்த்தம். மேலும் அந்த பெண்ணின் விருப்பப்படி வாழ்க்கைத்துணையும் அமையும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ