சனிப் பெயர்ச்சி: தீபாவளி முதல் அமோக வாழ்க்கையை பெறும் ‘5’ ராசிகள்!
சனி பெயர்ச்சி பலன்கள்: சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது.
Saturn Transit 2022: சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனி காலம் துவங்கியது. சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார்.இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். 2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறது. இதனால், தீபாவளி முதல் சில ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் சனியின் இந்த பெயர்ச்சியினால் பல நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். அதே சமயம் பணியில் இருப்பவர்கள் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் எதிர்பாராத பண வரவு உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்:
கடக ராசிக்கு ஏழாவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இத்துடன் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் தீரும். சிக்கல்கள் விலகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 23-ம் தேதி முதல் சனி பகவான் சஞ்சாரத்தினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இது பொருளாதார நிலையை பலப்படுத்தும். சனி நான்காம் வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு உண்டாகும். புதிய வேலைகளை தொடக்குவதற்கு இது சிறந்த நேரம். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும், அதனால் மனம் அமைதியாக இருக்கும். தொழிலதிபர்கள் மற்றும் அலுவலக வேலை செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ