Saturn Nakshathra Transit 2024: சனி தேவன் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி பகவான், ஏப்ரல் 6ம் தேதி அன்று பிற்பகல் 3:55 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 3, 2024 வியாழன் வரை பூரட்டாதி நக்ஷத்திரத்தில் இருக்கும் சனி, இதற்கு முன் நவம்பர் 24, 2023 அன்று சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், சனியின் இந்த நட்சத்திர சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்கின்றனர் ஜோதிடர்கள். இவர்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனை அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறக்கும் எனலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும், தொட்டது அனைத்தும் துலங்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


கன்னி ராசி


சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசிகளுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் சனிபகவான் கன்னி ராசிக்கு அதிபதியான புதனின் நண்பர். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம். பண வரவு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம் அல்லது ஒரு பிளாட் வாங்கக்கூடிய அளவுக்கு பணம் சம்பாதிப்பீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் சௌகரியங்களும் வசதிகளும் அதிகரிக்கும், இது உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


விருச்சிக ராசி


சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையில், அனைத்து பொருள் இன்பங்களையும் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேறுவதற்கு ஏராளமான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையால் உங்கள் மனம் நிறைந்திருக்கும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும்.


மேலும் படிக்க | சூரிய கிரகணம் பலன்கள்: ஏப்ரல் 8 முதல் இந்த ராசிகளுக்கு பணவிரயம், கஷ்டங்கள் ஏற்படும்


தனுசு ராசி


சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 


கும்ப ராசி


சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு நன்மை பயக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும், உங்கள் பதவி மற்றும் வருமானம் வேகமாக அதிகரிக்கும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். விரும்பிய வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, வாய்ப்புகள் வீடு தேடி வரும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். முக்கிய நபர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மேலும், நீங்கள் திட்டமிட்ட பணிகள் வெற்றி பெறும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சதுர்கிரஹி யோகம்... ஏப்ரலில் பட்டையை கிளப்பப் போகும் 5 ராசிகள் இவை தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ