சீதளா அஷ்டமி 2024: இந்து மதத்தில், பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ சப்தமி மற்றும் அஷ்டமி திதியில் சீதள மாதா வழிபாடு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நாளில் சீதள மாதாவை வழிபடுவதால் ஆரோக்கிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடுமையான நோய்களிலிருந்து விடுபடுங்கள். 'சீதளம்' என்றால் வெப்பத்தை தனிக்கும் குளிர்ச்சி. பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி சீதளா அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. இம்முறை சீதாலா சப்தமி விழா ஏப்ரல் 1ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. நாளை ஏப்ரல் 2ம் தேதி சீதளா அஷ்டமி கொண்டாடப்படுகிறது.
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.
சீதளாஷ்டகம் என்ற ஸ்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டி துதிக்கும் ஸ்தோத்திரம் இது. விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது என்பார்கள்.
கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை பலரைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளா அம்பாளை மக்கள் வழிபடுவவர். மேலும், சீதள அஷ்டமி நாளில் அனைவரும் பழைய நீர் ஆகாரம் மற்றும் குளிர்ந்த உணவை உண்ணும் பழக்கம் உண்டு. சீதளா அஷ்டமியில் விரதம் இருந்தால், நமது குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். சீதளா சப்தமி மற்றும் அஷ்டமி தினத்தன்று விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியம்மை, காய்ச்சல், கொப்புளம், கண் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். இது மட்டுமல்ல, பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் பெற இந்த நாளில் விரதம் இருப்பார்கள்.
சீதளா அன்னையின் கதை
ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.
சிவனின் ஜடையில் இருந்து தோன்றிய சீதளா தேவி
எனவே, சிவபெருமானை சரண் அடைந்த தேவர்கள், தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, நினைத்த சிவன் சீதலா தேவையை உருவாக்கினார். சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் தோன்றிய ஒளி, பார்வதியின் அம்சமாக மாறி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது.
இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார். அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களில், 'சீதளாயை நமஹ' என்ற சீதளா தேவியின் பெயரும் அடங்கும்.
சீதாள அஷ்டமி பூஜை வழிமுறை
குளிர் அஷ்டமி நாளில் அதிகாலையில் எழுந்து கங்கை நீர் கலந்த நீரில் குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்தி, முந்தைய நாள் தயாரித்த உணவுகளை அம்மனுக்குப் படைத்து வழிபட வேண்டும். வேப்ப மரத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். சீதளா மாதாவுக்கு அர்ப்பணித்த தண்ணீரை சிறிதளவு வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டைச் சுற்றி தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ