இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் பக்ரீத் பண்டிகைக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த பண்டிகை ஈத்-உல்-அஜா அல்லது தியாகத்தின் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. புனித ரமலான் மாதத்திற்குப் பிறகு சரியாக 70 நாட்களுக்குப் பிறகு பக்ரீத் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்ரீத் இஸ்லாமியர்களின் இரண்டாவது பெரிய பண்டிகையாகும், இது முழு உற்சாகத்துடன் இஸ்லாமிய சமுதாய மக்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி 12வது மாதத்தில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இது ரமலான் மாதம் முடிந்து 70 நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.


இந்தியா முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்
இந்தியாவில் இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்மக்கள் அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்கா, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காயிதே மில்லத்திடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏராளமாணவர்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.


இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின், அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR