ராகு பெயர்ச்சி 2023: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். மறுபுறம் கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். எப்போதும் பின்னோக்கி நகரக்கூடியன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடையப்போகிறார். எப்போதும் பின்னோக்கி நகரக்கூடியன. மேலும் ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் நுழைவார், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் காணப்படும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பலமான செல்வத்தையும், உயர் பதவியையும், கௌரவத்தையும் தருவார். எனவே ராசிகளை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | Venus Transit: உச்சத்தை அளிக்கும் சுக்கிரன்... இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் மட்டும் தான்!


ராகு பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் விதியை மாற்றும்


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென பண பலன்கள் கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் பயனடையலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். லாபம் வேகமாக அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு இருக்கும். எனவே 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.


 


மகரம்: மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி அதீத பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் தொடர்ந்து அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். சில பெரிய வெற்றிகள் அல்லது சாதனைகளை அடைவார்கள் இந்த ராசிக்காரர்கள். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும். சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.


கும்பம்: 2023ல் அக்டோபர் வரை கும்ப ராசிக்கு ராகு 3ம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த அமைப்பானது கும்ப ராசிக்கு பல விதத்தில் சாதகமான பலனையே தரக்கூடியதாக இருக்கும். சனி தற்போது தனது ராசியான கும்பத்தில் இருப்பதால் மார்ச் 2025 வரை அங்கேயே இருப்பார். சனியும் ராகுவும் நட்பு கிரகங்கள் என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இந்த ராசி மக்கள் திடீர் பண பலன்களைப் பெறுவார்கள், இது அவர்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ