சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்!

Shukra Mahadasha: ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், ஒருவரின் வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. அவனிடம் அபரிமிதமான புகழ், அன்பு ஆகியவையும் பெருகும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2023, 03:15 PM IST
  • சுக்கிரனின் மகாதசை அதிகபட்சம் 20 ஆண்டுகள் நீடிக்கும்.
  • இந்த காலகட்டம் சிலரை ராஜாவாக மாற்றும்.
  • சிலருக்கு சுக்கிர மகாதசையில் தாழ்வான பார்வை வறுமையை கொடுக்கும்.
சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்! title=

Shukra Mahadasha: சுக்ர மகா தசைக்கான பரிகாரங்கள்: ஜோதிடத்தில், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஒன்று அல்லது மற்றொரு கிரகத்துடன் தொடர்புடையது. சுக்கிரன் கிரகம் குறித்து பார்த்தோமானால், சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், அன்பு, ஈர்ப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகமாகும். 

ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், ஒருவரின் வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. அவனிடம் அபரிமிதமான பணம், புகழ், அன்பு ஆகியவை இருக்கும். அதாவது, ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இதனுடன், அவரது காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். மறுபுறம், சுக்கிரனின் கீழ்பார்வை நிறைய வலியைக் கொடுக்கும். 

சுக்கிரனின் மகாதசையின் பலன்

சுக்கிரனின் மகாதசை அதிகபட்சம் 20 ஆண்டுகள் நீடிக்கும். இதன்போது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலைப்படி இவரது வாழ்க்கை பாதிக்கப்படும். சுக்கிரன் சாதகமாக இருந்தால், சுக்கிரனின் 20 வருட மஹாதசை அவர்களுக்கு மகிழ்வான வாழ்வை அளிக்கும். அவருக்கு அபரிமிதமான செல்வம், மகிழ்ச்சி கிடைக்கும். அவன் வாழ்வில் எதற்கும் குறைவில்லாமல் இருக்கும். அவருக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். 

மேலும் படிக்க | லட்சுமி அன்னைக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

மறுபுறம், ஜாதகத்தில் சுக்கிரனின் பலவீனமான நிலை பூர்வீகத்திற்கு வறுமையையும் போராட்டத்தையும் தருகிறது. அவரின் வாழ்க்கை வறுமையில் கழிகிறது. அவர் ஏழ்மையை அதிகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அவன் வாழ்வில் அன்பு குறையும். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை சலிப்பானதாகவே அமையும். சிலருக்கு துணையே அமையாமல் போகும் நிலையும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அவரது ஆளுமையில் ஈர்ப்பு இருக்காது. அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். 

சுக்கிரனின் மகாதசைக்கான பரிகாரங்கள்

இத்தகைய சூழ்நிலையில், சுக்கிரனின் மகாதசையின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இல்லையெனில், சுக்கிரனின் தாழ்வான பார்வை, நிறைய தொந்தரவை கொடுக்கலாம். இது சுக்கிர தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில், சுக்ர தோஷத்தை தவிர்க்க சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

- வாழ்க்கை பொருளாதாரப் பிரச்சனைகளால் சூழப்பட்டால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாவு மற்றும் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு உணவளிக்கவும். இதன் மூலம் உங்கள் நிதி நிலை மேம்படும்.

- சுக்கிரன் தோஷத்தைப் போக்க நல்ல வழி, சுக்கிரனின் மந்திரத்தை ஜபிப்பது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது 108 முறை சுக்கிரனின் 'ஷுன் சுக்ரே நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

- வெள்ளிக்கிழமையன்று பால், தயிர், நெய், வெள்ளை வஸ்திரம், முத்து போன்றவற்றை தேவையுடைய அந்தணர்களுக்கு தானம் செய்தால் சுக்கிரனின் தோஷம் நீங்கி பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகா லட்சுமியை வணங்கி விரதம் அனுசரிக்கவும். இனிப்பான பிரசாதத்தை மகா லட்சுமிக்கு படைக்கவும். பின்னர், அந்த பிரசாதத்தை பெண்களுக்கு விநியோகிக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும்.  

- பசுவிற்கு தினமும் உணவளிப்பது பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷத்தில் குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News