புதுடெல்லி: சுயஜாதகத்தில் எவ்வளவு பெரிய யோக தசைகள் நடந்தாலும், ஏழரை சனி நடக்கும்போது, மனம் கலக்கமடைகிறது. ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி காலங்களில் மற்றும் கண்டகச் சனி காலங்களில்  வேறு  ஏதேனும் கோட்சார ரீதியாக நல்ல.  சுப கிரகமான குரு  பெயர்ச்சி போன்ற விஷயங்கள்கூட எடுபடாது என்பதால் ஏழரை சனியின் பாதிப்பு அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பாதிப்பு என்பது அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றவாறு கூடக் குறைய இருக்கும். ஏழரை சனி, யாரை அதிக அளவு பாதிக்கும் என்று தெரியுமா? சுய ஜாதகத்தில் சனி மிகுந்த பாவத்துவமான நிலையில் இருப்பவர்களுக்கு ஏழரை சனி பாடாய் படுத்துவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல, லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு, பகை நிலையில் சனீஸ்வரர் இருந்தால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக மேஷம், விருச்சிகம் ராசிகள் அதிகம் பாதிக்கப்படும். அதிலும், சிம்ம லக்னக்காரர்களுக்கு, சனி தசையும் நடந்து உடன் ஏழரை சனி நடக்கும் பொழுது, ராசி  லக்னம் இரண்டுமே சனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள்.


இதுவே சுய ஜாதகத்தில் சனி அமர்ந்த பாவகம், ஆட்சி உச்சம் போன்ற அமைப்புகளில் நட்பு நிலையிலான லக்னங்களில் சனி தசையும் நடந்துக் கொண்டிருந்தால் பாதிப்புக்கு பதிலாக நல்ல பலன்களை கொடுப்பார். அப்படிப்பட்டவர்களுக்கு, திருமணம், குழந்தை பாக்கியம்,  வேலை உத்தியோகம் மாறுவது, பதவி உயர்வு, சுப நிகழ்வுகள் என பல நன்மைகளைக் கொடுத்தாலும், சிற்சில கெடுதல்களையும் செய்யாமல் விடமாட்டார் சனி பகவான்.


மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு 


அதிலும், சனி தசையில் ஏழரைசனி மற்றும் அஷ்டமசனி காலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். சரி, சனீஸ்வரரின் கொடும் பார்வையைக் கொடுக்கும், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி காலங்களில் சில பரிகாரங்கள் செய்தால் நிவாரணம் கிடைக்கும். 


காலபைரவரின் அம்சமாக கருதப் படக் கூடிய நாய்களுக்கு உணவிடுவது நன்மை த்ரும். ஆதரவின்றி இருக்கும் தெரு நாய்களுக்கு, ஒரு வேளையாவது உணவு கொடுங்கள். இது மிகப் பெரிய அளவில் வரும் பாதிப்புகளைக் குறைத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று சொல்ல வைக்கும்.


தேவைப்படுபவர்களுக்கு தானங்களை செய்ய வேண்டும். தானம் என்றால், வசதியானவர்களுக்குக் கொடுப்பது அல்ல என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ளவும். நமக்கு சம்பந்தமே இல்லாத மற்றும் அன்றாடம் உழைத்து சாப்பிட்டு, அடுத்த வேளை உணவுக்கும் உழைப்பையே நம்பியிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு உணவு கொடுங்கள். 


மேலும் படிக்க | பெயர்ச்சியாகும் புதன் மற்றும் சுக்கிரனால் அடித்தது யோகம்: 4 ராசிகளுக்கு அற்புதம் 


உழைப்பதற்கு காரணங்களை உருவாக்கித் தரும் சனீஸ்வரருக்கு, தன்னால் துன்பப்படுபவர்களுக்கு உதவுபவர்கள் மீது கருணை பெருகும். அதேபோல, நல்லெண்ணெய் தானம் செருப்பு குடை போன்றவை தானமாக தருவதும் சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.


உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது, அதிகமாக உழைப்பது, தானங்கள் கொடுப்பது ஆகியவை சனீஸ்வர் கொடுக்கும் கெடுபலன்களைக் குறைத்துக் கொடுக்கும். சனீஸ்வரரின் வாகனமான காக்கைக்கு உணவு வைக்கும் பழக்கமும், சனீஸ்வரர் கொடுக்கும் தாக்கத்தை மட்டுப்படுத்தும். விநாயகர் வழிபாடும் அனுமன் வழிபாடு நன்மை தரும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தியும் செவ்வாயின் வக்ர கதியும் இந்த 4 ராசிகளுக்கு அருமை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ