சனீஸ்வரர் என்றாலே அனைவருக்கும் பயம் ஏற்படும். ஆனால், உண்மையில் சனீஸ்வரர், அவரவர் நன்மை தீமைக்கு ஏற்றாற்போல பலன்களைக் கொடுப்பவர். சனியின் அருள் அதிர்ஷ்டத்தை மாற்றுகிறது. சனீஸ்வரரின் அருள் பார்வை சில ராசிகளின் மீது எப்போதும் உள்ளது. 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு கெட்ட காலமாகவே இருந்தாலும், அதை சுலபமாக கடக்க வைப்பார் சனீஸ்வரர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது, சனி மகாதசையாக இருந்தாலும் சரி, ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் சரி...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் தாக்கத்தால் அதிக சிரமங்களை சந்திக்கத் தேவையில்லாத இந்த ராசியினர், சனியின் ஆசிர்வாதத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அது மட்டுமல்லாமல், பணம் மற்றும் புகழையும் வாரி வழங்கும் சனிக்கு பிடித்தமான ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
 
சனிக்கு பிடித்தமான ராசிகள்


ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன், ஆனால் இந்த ராசியினருக்கு, சுக்கிரனுடன் சனிதேவனும் கருணை காட்டுகிறார். ஏழரை சனி, சனி திசை என பிரச்சனைக்குரிய காலகட்டங்களிலும் இவர்களுக்கு சனி தேவர் அதிக சிரமம் கொடுப்பதில்லை. மாறாக, சனியின் மகாதசை அவர்களுக்கு சாதகமாக அமையும். இவர்கள் தொழிலில் உயர் பதவியை அடைவார்கள். நிறையப் பணமும் பெயரும் சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 


துலாம்: துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன்தான். இவர்களுக்கு சுக்கிரனுடன் சனியும் அருள்பாலிக்கிறார். துலாம் ராசி உள்ளவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் மிகவும் அசுபமாக இல்லாவிட்டால், சனிபகவான், ஏழரை சனியில் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. சனியின் அருளால், துலாம் ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.


கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதி சனி என்பதால், இயல்பாகவே இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார். இந்த ராசியினர் சனியின் ஆசிர்வாதத்தைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் வாழ்க்கையில் செல்வமும், செல்வாக்கும் பணமும் மரியாதையும் பெறுகிறார்கள். இந்த மக்கள் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திப்பதில்லை. இவர்களுக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டம சனியிலும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுவதில்லை.  


மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை


தனுசு: தனுசு ராசியின் அதிபதி குரு. க்ரு பகவானுக்கும் சனிக்கும் இயல்பான உறவு இருப்பதால், தனுசு ராசிக்காரர்களை சனி தொந்தரவு செய்வதில்லை. அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி, சனி மகாதசை காலங்களில் கூட, தனுசு ராசிக்காரர்களை சனீஸ்வரர் தொந்தரவு செய்வதில்லை. மாறாக, அவர்களுக்கு பதவி, பணம், கௌரவம் என அனைத்தையும் சனீஸ்வரர் கொடுக்கிறார்.


மகரம்: மகர ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி என்பதால், இயல்பான இணக்கத்தைக் கொண்ட சனீஸ்வரர், மகர ராசிக்காரர்களுக்கு அருள் பாலிக்கிறார், அதோடு, சனியின் தாக்கத்தை பெற்ற, மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்றும் பெயர் பெறுவார்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறும் அருளையும் சனி பகவான் கொடுக்கிறார்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்! குபேரரின் செல்லப் பிள்ளைகளின் ராசி இது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ