ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு கெடுபிடியான காலம்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

Ezharai Nattu Sani: ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் வேதனையானதாக இருக்கும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும், கும்ப ராசிக்காரர்களுக்கு மிக விரைவில், ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 05:48 PM IST
  • ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் பொதுவாக பல சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்.
  • இந்த கட்டத்தில் நிதி நெருக்கடி, உடல் மற்றும் மனரீதியான சிரமங்கள் ஏற்படும்.
  • பல வித இன்னல்களையும் தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு கெடுபிடியான காலம்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும் title=

ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றமும் நிலை மாற்றமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள். 

இந்து பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 அன்று மகர ராசியில் வக்ர நிவர்த்தி ஆகி தனது இயல்பு நிலைக்கு திரும்பினார். இப்போது அவர் இந்த ராசியில் நேர் இயக்கத்தில் இருக்கிறார். தற்போது கும்ப ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் நடக்கின்றது. ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் வேதனையானதாக இருக்கும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும், கும்ப ராசிக்காரர்களுக்கு மிக விரைவில், ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். 

கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம்: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை

பஞ்சாங்க குறிப்புகளின் படி, 29 ஏப்ரல் 2022 அன்று, சனி பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கியது. கும்ப ராசியில் சனியின் வருகையால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைத்தது. மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கியது. கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திற்கு ஆளானார்கள். 

மேலும் படிக்க | நவம்பர் மாத கிரக பெயர்ச்சியினால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ராசிகள்! 

சனியின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?

இந்து பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் 23 ஏப்ரல் 2022 அன்று கும்பத்தில் நுழைந்தார். சனி ஜூன் 5 வரை வக்ர நிலையில் இருந்தார். இதற்குப் பிறகு, ஜூலை 12 ஆம் தேதி, அவர் வக்ர நிலையிலேயே மகர ராசிக்கு மாறினார். இப்போது அக்டோபர் 23 ஆம் தேதி, அவர் வக்ர நிவர்த்தியாகி இயல்பு நிலைக்கு திரும்பினார். ஜனவரி 17, 2023 அன்று சனி மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். 

கும்ப ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து எப்போது விடுபடுவார்கள்?

கும்ப ராசிக்காரர்கள் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் 24 ஜனவரி 2022 அன்று தொடங்கியது. 3 ஜூன் 2027 அன்று இவர்களுக்கு இதிலிருந்து முக்தி கிடைக்கும். ஏழரை நாட்டு சனியின் மூன்று கட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

சனியின் இரண்டாம் கட்ட தாக்கம் எப்படி இருக்கும்? 

ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் பொதுவாக பல சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த கட்டத்தில் நிதி நெருக்கடி, உடல் மற்றும் மனரீதியான சிரமங்கள் ஏற்படும். பல வித இன்னல்களையும் தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பரிகாரங்கள்

சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பாத்திரத்தை எண்ணெயுடன் சனி பகவானின் கோவிலில் வைத்துவிட வேண்டும். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும்.

மேலும் படிக்க | நவம்பர் மாதம் சில ராசிகள் உச்சம் தொடும், சில ராசிகள் சிக்கலில் சிக்கும்: உங்க ராசி என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News