சனி மகாதசை: மங்களகரமான வேலைகளைச் செய்வதற்கும் மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதற்கும் விஜயதசமி மிக நல்ல நாளாக கருதப்படுகின்றது. விஜயதசமி தினம் சனிபகவானின் அருள் பெறவும் சிறந்த நாளாக கருதப்படுகின்றது. இந்த நாளில் நாம் சில பரிகாரங்களை செய்தால், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் மற்றும் சனி தசையின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம். தற்போது 5 ராசிகளின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. இவர்கள் விஜயதசமி நாளில் வன்னி மரம் தொடர்பான சிறப்பு பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிகளில் சனியின் மகாதசையின் தாக்கம் உள்ளது


இந்த நேரத்தில், மகரம், கும்பம், தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழரை நாட்டு சனியின் பிடியில் இருப்பவர்களுக்கு நிதி, மன, உடல் மற்றும் உணர்ச்சிகளால் வேதனைகள் வருகின்றன. ஜாதகத்தில் சனி அசுபமாக இருந்தாலோ அல்லது அந்த நபரின் செயல்கள் சரியில்லாமல் இருந்தாலோ சனி பல பிரச்சனைகளை உண்டாக்குகிறார். சனியின் தொல்லைகளிலிருந்து விடுபட, இந்த ராசிக்காரர்கள் விஜய தசமி நாளில் சில பரிகாரங்களை செய்யலாம். 


வீட்டில் வன்னி மர செடியை நடவும்


விஜயதசமி நாளில் வீட்டில் வன்னி மர செடியை நடவும். இதனால், சனி பகவான் மகிழ்ந்து சுப பலன்களைத் தருகிறார். இதனுடன், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் மோசமான விளைவுகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. 


மேலும் படிக்க | அக்டோபரில் பெரிய கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை, செல்வம் பெருகும் 


இதற்கு விஜயதசமி நாளில், அதிகாலையில் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். பின்னர் தொட்டியில் சுத்தமான மண்ணை எடுத்து வன்னி மர செடியை நடவும். செடியை நடும்போது, வெற்றிலை மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை செடியின் வேருடன் சேர்த்து அழுத்தவும். மேலும் மஞ்சள் மற்றும் கங்கை நீரையும் சேர்க்கவும். இந்த பரிகாரம் சனி பகவானை மகிழ்விக்கும். மேலும், இந்த செடி எவ்வளவு அதிகமாக வளர்கிறதோ, அவ்வளவு அதிகமாக அந்த நபர் முன்னேறுவார் என்று நம்பப்படுகிறது.


சனி பகவானுக்கான பிற பரிகாரங்கள்


- சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். 


- எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். 


- சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும்.


- சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.


- ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம். 


- சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும். 


- பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்படி சனி பகவானை மனமுருகி வேண்டிக்கொள்ளவும்.


- உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, உளுந்தை கோவிலில் உள்ள ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் பிடியில் 3 ராசிகள்: கெடுபிடியான காலம், இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ