குரு பகவானின் பெயர்ச்சி: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் ராசி மற்றம் அல்லது அவற்றின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. கிரகங்களில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றான வியாழன், அதாவது குரு, தீபாவளிகு பிறகு தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். தேவகுரு வியாழன் 29 ஜூலை 2022 அன்று மீன ராசியில் பெயர்ச்சியானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவான் வக்ர நிலையில், அதாவது தலைகீழ் இயகத்தில் சஞ்சரித்து வருகிறார். இப்போது, அக்டோபர் 26 அன்று, அவர் மீன ராசியில் நேர் இயக்கத்துக்கு மாறுவார். குரு பகவான் நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் இருப்பார். குருவின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறும், அவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம்: 


ரிஷப ராசியினருக்கு மீன ராசியில் குருவின் இயக்கம் நல்ல பலன்களைக் கொண்டு வரும்.  ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வகைகளில் வருமானம் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். உறவுகளில் இனிமை இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு அதிகரிக்கும்.


மேலும் படிக்க | மாறுகிறது சனியின் பாதை: இந்த ராசிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் 


மிதுனம்: 


மீனத்தில் வியாழனின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வரும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அனைத்திலும் முன்னேற்றம் அடைவார்கள்.  வியாபாரத்தில் பெரிய சலுகைகள் கிடைக்கும். இந்த நேரத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்தும் விடுபடலாம்.


கடகம்: 


குருவின் பாதை மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவார்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். மேலும், தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லலாம்.


கும்பம்: 


மீன ராசியில் வியாழனின் மாற்றம், கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலையை வலுவாக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


வாழை மரத்தை வணங்க வேண்டும்


மத நூலான மகாபாரதத்தின் படி, தேவகுரு பிருஹஸ்பதி மகரிஷி அங்கீராவின் மகன் ஆவார். சாஸ்திரங்களின்படி, வியாழன் கிரகம் பிரம்ம தேவரை குறிக்கிறது. வாழை மரத்தை குருவாகக் கருதி வழிபட்டால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | விருச்சிக ராசியில் நுழையும் சுக்கிரன், இந்த 6 ராசிகளுக்கு பண வரவு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ